சியோமியின் 100 பில்லியன் டாலர் கனவு.. கோவிந்தா.. கோவிந்தா..!

ஸ்மார்ட்போன் சந்தையில் குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய இடத்தைப் பிடித்த சியோமி, அடுத்தகட்ட வளர்ச்சி பாதைக்குச் செல்ல வேண்டும் எனத் தனது நிறுவனத்தை ஹாங்காங் பங்குச்சந்தையில் குதிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைப் படு வேகமாகச் செய்து வருகிறது சியோமி.

100 பில்லியன் டாலர்

இந்நிலையில் சியோமி தனது நிறுவனத்தை 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டு உடன் பங்குச்சந்தையில் இறங்கும். இது ஹாங்காங் பங்குச்சந்தையில் மிகப்பெரிய தொகையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான இருக்கும் எனச் சியோமி கனவு கண்டது.

தடுமாற்றம்

இந்நிலையில் சியோமி மற்றும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு நிறுவனங்கள் மத்தியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீன டெப்பாசிட்டரி ரெசிப்ட்ஸ் இந்நிறுவனத்தின் மதிப்பீட்டை 55-70 பில்லியன் டாலர் வரையிலேயே இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

பின்னடைவு

இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்யக் காத்திருந்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் 70 பில்லியன் டாலர் மதிப்பீடு சரியானதாக இருந்தால், சியோமி தனது வர்த்தக வளர்ச்சி மூலம் அடுத்தச் சில வருடங்களிலேயே 100 பில்லியன் டாலர் அளவை எளிதாகக் கடந்து விடும்.

 

சியோமி

சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களை ஓடஓட விரட்டும் 'சியோமி'..!

Read more about: china xiaomi smartphone ipo

Have a great day!
Read more...

English Summary

China's Xiaomi cuts valuation to $55 billion to $70 billion