இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்? எப்படி நடந்தது?

நீராவ் மோடிக்கு 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் அளித்த அதிகாரிகளை விசாரித்து வரும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி எப்படி இந்த மோசடிகள் நடைபெற்றது என்ற தகவலினை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மூத்த அதிகாரியான கோகுல்நாத் ஷெட்டி தான் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாக உள்ளார். இவர் 1 கோடி ரூபாய் விதம் என 13,000 பரிவர்த்தனைகள் மூலம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

வரம்பிற்கு மீரிய பரிவர்த்தனை

கோகுல்நாத் ஷெட்டிக்கு அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனை வரம்பு 25 லட்சம் ரூபாய் மட்டுமே என்று இருந்த நிலையிலும் 1 கோடி ரூபாய் விதம் என 13,000 பரிவர்த்தனைகளை இவர் எப்படிச் செய்துள்ளார் என்பதும் கேள்விக்குறியது.

பணி மாற்றம்

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை மேலாளராக இருந்து வந்த கோகுல்நாத் ஷெட்டி 2010 மார்ச் 31-ம் தேதி தான் மும்பை வங்கியின் அந்நிய செலாவணி துறைக்கு மாறியுள்ளார். அப்போது முதலே மோசடியானது தொடர்ந்து நடைபெறத் துவங்கியுள்ளது.

மின்னஞ்சல்கள்

பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி வழக்கில் 4 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வங்கி நேரம் முடிவடைந்த பிறகு மாலை 8 முதல் 9:30 மணி இடைவேளையில் வங்கியின் டெல்லி கருவூலப் பிரிவுக்குத் தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து 35 கடிதங்களை அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இதைல் 22 மின்னஞ்சல்கள் இவரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வைத்து இருந்து மின்னஞ்சல் முகவரியில் இருந்து சென்றுள்ளது.

மின்னஞ்சல்களுக்கு உள்ள ஒற்றுமை

இந்த மின்னஞ்சல்களின் ஒற்றுமை என்னவென்றால் எல்லாமே நீரவ் மோடி குழும நிறுவனங்களான டைமண்ட் ஆர் யூஎஸ், சோலார் எக்ஸ்போஎர்ட்ஸ் மற்றும் ஸ்டெல்லர் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனைகளைச் செய்வதற்காக அனுப்பப்பட்டது ஆகும். இந்த மின்னஞ்சலுக்கு அதிகாரிகள் ஒத்துழைத்து தான் மோசடி நடைபெற்றுள்ளது.

வெளிவந்த மோசடி

2018-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் தான் பஞ்சாப் நேஷ்னல் வங்கி தனிக்கை ஆய்வில் 6,498 கோடி ரூபாய் வரை LoU அத்தாட்சி கடிதங்கள் மூலம் முறைகேடாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்த மோசடி தொகை

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இது குறித்து விசாரணை செய்து வந்த நேரத்தில் 6,498 கோடி ரூபாய் மோசடியானது 13,000 கோடியானது மட்டும் இல்லாமல் இவரது மாமா மேஹூல் சோக்ஸி உள்ளிட்டோரும் சிக்கினர். ஆனால் நீராவ் மோடி மற்றும் மேஹூல் சோக்ஸி இருவரும் தற்போது வரை தலைமறைவாகவே உள்ளனர்.

எப்படி மோசடி மறைக்கப்பட்டு வந்தது?

கோகுல்நாத் ஷெட்டியும் இந்த LoU அத்தாட்சி கடித பரிவர்த்தனைகளை ஆய்வு செய்பவர்களில் ஒருவராக இருந்த வந்த நிலையில் மோசடி நடைபெற்றதை மூடி மறைத்துக்கொண்டே வந்துள்ளார். இதுவே 7 வருடமாக இந்த மோசடி வெளிச்சத்திற்கு வராததின் முக்கியக் காரணம். இவர் ஓய்வு பெற்ற பிறகு இந்த மோசடி அம்பலமானதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சேமிக்கப்படாத தகவல்கள்

மேலும் LoU கடன் அத்தாட்சி கடித தகவல்களை மின்னஞ்சல் மூலம் செய்யாமல் தற்காலிக வங்கி தகவல் பரிமாற்ற சேவை மூலம் பகிர்ந்து செய்துள்ளார். இந்த முறையில் உரையாடப்படும் தகவல்கள் சேமிக்கப்படுவதில்லை என்பதால் மோசடி குறித்து விவரங்கள் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

மத்திய நிதி அமைச்சரான அருண் ஜேட்லிக்கு பஞ்சாப் நேஷ்னல் வங்கி அளித்து எழுத்துப்பூர்வ கடிதத்தில் நீராவ் மோடி குழுமத்திற்கு 1,590 LoU கடன் அத்தாட்சி கடிதங்கள் முறைகேடாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருந்தனர்.

Have a great day!
Read more...

English Summary

Who Is The PNB Official Behind India's Largest Banking Fraud? How It Happen?