ஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிய நிர்வாக அதிகாரி நியமனம்..!

ஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் இருக்கும் எம்.கே.சர்மா அவர்களின் பதிவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் முன்னாள் பெர்ரோலிய துறை செயலாளர் கிரிஷ் சந்திரா சதுர்வேதி அவர்களை non-executive சேர்மேன் ஆக இணைத்துள்ளது.

இவர் ஜூலை 1ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகக் குழுவில் பணியாற்றத் துவங்கி அடுத்த 3 வருடத்திற்கு அவரது பணி தொடரும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இவரது நியமனத்திற்கு ஐசிஐசிஐ வங்கி நிர்வாகமும், ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது.

எம்.கே சர்மா ஜூன் 30ஆம் தேதி வெளியேறிய அடுத்த நாளிலேயே கிரிஷ் சந்திரா நியமிக்கப்படுவதால் நிர்வாகத்தில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

ICICI Bank appoints ex IAS G C Chaturvedi as non executive chairman