திட்டமிட்டது 100 பில்லியன் டாலர், கிடைத்ததோ 54 பில்லியன் டாலர்.. சோகத்தில் சியோமி..!

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, பங்குச்சந்தையில் 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இறங்க வேண்டும் எனத் திட்டமிட்ட நிலையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளின் கணக்கீடு மூலம் இதன் அளவு 54 பில்லியன் டாலராகக் குறைந்தது.

Advertisement

இந்நிலையில் சியோமி ஹாங்காங் பங்குச்சந்தையில் சுமார் 2.18 பில்லியன் டாலர் பங்குகளைச் சுமார் 17 ஹாங்காங் டாலர் விலைக்கு விற்பனை செய்துள்ளது. ஆனால் போட்டியின் காரணமாகச் சில பங்குகள் 22 டாலர் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

மேலும் சியோமி பங்குச்சந்தையில் பட்டியலிட்டதன் வாயிலாக இந்நிறுவனமும் முதலீட்டாளர்களும் சுமார 4.7 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பெற்றனர்.

சியோமி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட்டதன் மூலம் இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் 2 பேர் ஏற்கனவே பில்லியனராக இருந்த நிலையில், தற்போது இன்னொரு நிறுவனரும் பில்லியனராக உயர்ந்துள்ளனர்.

English Summary

Xiaomi's IPO Raises $4.7 Billion After Pricing on Low End - tamil Goodreturns | திட்டமிட்டது 100 பில்லியன் டாலர், கிடைத்ததோ 54 பில்லியன் டாலர்.. சோகத்தில் சியோமி..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Advertisement