உயர் சொத்து மதிப்பு தனிநபர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடம்..!

பங்குச் சந்தையின் வளர்ச்சியால், தனிநபர்களின் செல்வம் 10.6 சதவிகிதம் உயர்ந்து, 70 டிரில்லியன் டாலர் அளவுக்கு வளர்ந்துள்ளது. உலகச் செல்வ அறிக்கை 2018 -ன்படி இது தெரியவந்துள்ளது. மேலும் இவ்வறிக்கையின் கணிப்பின்படி, உயர் சொத்து மதிப்புக் கொண்ட தனிநபர்களின் (HNI) செல்வம் 2025 ஆம் ஆண்டுக்குள் 100 டிரில்லியன் டாலரை எட்டும் எனத் தெரிய வருகிறது.

அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்

முன்னணியில் உள்ள நாடுகள்

உலக அளவிலான தனிநபர் செல்வ வளர்ச்சியில் ஆசிய பசிபிக் நாடுகளோடு வட அமெரிக்க நாடுகளும் முன்னணியில் உள்ளன. இந்த இரண்டு பகுதிகளையும் சேர்ந்த நாடுகளில் பெருஞ்செல்வம் படைத்த தனிநபர்களின் எண்ணிக்கை 74.9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில் 1.2 மில்லியன் புதிய செல்வந்தர்களும் அடக்கம். செல்வம் படைத்தவர்களின் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ள ஆசிய பசிபிக் நாடுகளில் 6.2 மில்லியனுக்கும் மேற்பட்ட செல்வந்தர்கள் உள்ளனர். இது உலக அளவல் 34 சதவிகிதம் ஆகும். உலகச் செல்வ வளத்தில் இந்நாடுகளின் பங்கு 30 சதவிகிதம் ஆகும்.

முதல் நான்கு நாடுகள்

செல்வ வளம் படைத்த தனிநபர்கள் மிகுந்துள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து ஜப்பான், ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. உலகில் உள்ள செல்வந்தர்களில் 61.2 சதவிகிதத்தினர் இந்நாடுகளில் உள்ளனர். புதிதாக உருவாகும் செல்வந்தர்களில் 62 சதவிகிதத்தினர் இந்நாடுகளைச் சேர்ந்தவர்களே.

வேகமாக வளரும் நாடு

  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரித் திட்டத்தினால் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் செல்வம் படைத்த தனிநபர்களின் எண்ணிக்கை 20.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. செல்வ வளத்தைப் பொறுத்த வரை இந்த உயர்வு 21.6 சதவிகிதமாக உள்ளது.

இந்தியா

செல்வ வளம் படைத்தவர்கள் மிகுந்த நாடுகளில் இந்தியா 11 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போதைய நிலையில் நெதர்லாந்து நாட்டைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா. 2016 ஆம் ஆண்டில் 219 ஆக இருந்த அதிகச் செல்வம் படைத்த தனிநபர்களின் எண்ணிக்கை (HNI) 2017 ஆம் ஆண்டில் 263 ஆக உயர்ந்துள்ளது.

முன்னிலை வகிக்கும் ரியல் எஸ்டேட் துறை

உயர் சொத்து மதிப்புக் கொண்ட தனிநபர்கள் அதிகமாக முதலீடும் செய்யும் துறையாக ரியல் எஸ்டேட் துறை வளர்ந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டில் இத்துறையில் முதலீடு 14 சதவிகிதமாக இருந்தது. 2017 ஆம் ஆண்டில் 16.8 சதவிகிதமாக உயர்ந்தது. மொத்த ரியல் எஸ்டேட் துறை முதலீட்டில் குடியிருப்புக் கட்டுமானங்களுக்கான முதலீடு 51.6 சதவிகிதமாகும். ரியல் எஸ்டேட் வணிகம் 15.4 சதவிகிதமும், நிலம் தொடர்பான முதலீடு 12.8 சதவிகிதமுமாக உள்ளது.

ரியல் எஸ்டேட்

மொத்தத்தில் HNI-க்கள் முதலீடு செய்யும் துறைகளில் ரியல் எஸ்டேட் துறை மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தை நிறுவனப் பங்குகள் பிடித்துள்ளன. இரண்டாவது இடத்தைப் பணம் மற்றும் பணமாக மாற்றக் கூடிய குறுகிய கால முதலீடுகளும் (cash or cash equivalents) பிடித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

India Among Largest HNI Markets Globally - Tamil Goodreturns | உயர் சொத்து மதிப்பு தனிநபர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா 11வது இடம்..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்