யூபிஐ செயலியில் இனி 2 லட்சம் வரையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்..!

தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் மத்தியிலான பணப்பரிமாற்றம் செய்யும் யூபிஐ செயலியில் பரிமாற்ற அளவை லட்சம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் அதிகப்படியாக 2 லட்சம் வரையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இதனை நடைமுறைப்படுத்த ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் வேண்டும் என்பதால் அமலாக்கம் செய்யப்படாமல் உள்ளது.

மேலும் அடுத்தச் சில வாரத்தில் யூபிஐ 2.0 செயலி வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. யூபிஐ செயலியை பயன்படுத்தவோர் புதிய அப்டேட் வந்த உடனேயே அதனைப் புதுப்பித்துப் பயன்படுத்த வேண்டும்.

யூபிஐ செயலி ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் உருவாக்கப்பட்டுப் பேமெண்ட் சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Read more about: upi bank money யூபிஐ

Have a great day!
Read more...

English Summary

Transaction cap may be doubled to Rs 2 lakh in UPI 2.0