பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு திடீர் உதவி.. என்ன காரணம்..?

இந்திய பொதுத்துறை வங்கிகள் தற்போது பல்வேறு மோசடிகளாலும், வராக் கடன் பிரச்சனைகளாலும் அதிகளவிலான பிரச்சனையைச் சந்தித்து வருகிறது. அதிலும் பஞ்சாப் நேஷனல் வங்கி வைர வியாபாரிகளான நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் செய்த மோசடிகளால் வர்த்தக ரீதியாகவும், சந்தை மதிப்பீட்டு வாயிலாகவும் அதிகளவிலான பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

6 பொதுத்துறை வங்கிகள்

முடங்கிக் கிடக்கும் பொதுத்துறை வங்கிகளை மீட்டு எடுக்கும் வகையில், மத்திய அரசு 5 அல்லது 6 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை உட்செலுத்த திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு தேர்வு செய்யப்பட உள்ள 6 வங்கிகள் பட்டியலில் பஞ்சாப் நேஷனல் வங்கியும் இருக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது என நிதியமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

பத்திர முதலீடுகள்

சில பொதுத்துறை வங்கிகள் முதல் தர முதலீட்டுப் பத்திரங்கள் மீதான முதலீட்டுக்கான பணமும், வட்டி செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்து அளவிற்கு வங்கி நிதி நிலையைக் காட்டவில்லையெனில் வங்கிகளின் தரம் தாழ்ந்துவிடும். இத்தகைய மோசமான நிலையை மத்திய அரசு சந்திக்க விரும்பாது.

ஆகவே தான் தற்போது முதலீடு செய்து இந்த முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்கத் திட்டமிட்டு வருகிறது.

 

88,000 கோடி ரூபாய்

மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் நாட்டில் உள்ள 20 பொதுத்துறை வங்கிகளின் வர்த்தகம் மேம்படுத்த 2018ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 88,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை உட்செலுத்துவதாக அறிவித்தது.

முதலீட்டு ஈர்ப்புத் திட்டம்

இந்த 88,000 கோடி ரூபாயில் 70,000 கோடி ரூபாயைப் பத்தி விற்பனையின் வாயிலாகவும், 8,139 கோடி ரூபாய் பட்ஜெட் ஈட்டுத் தொகையாகவும், 10,312 கோடி ரூபாய் பொதுச் சந்தையில் இருந்து நேரடியாக முதலீட்டை ஈர்க்க உள்ளதாகவும் திட்டத்தை வகுத்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

PNB and other PSBs may get Rs 8,000 crore lifeline