74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்?

மத்திய அரசு பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழாமை கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பொதுத் துறை வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் 74 சதவீதத்திற்கும் அதிகமாக மோசடி அபாயம் உள்ள பழைய மென்பொருள்களுடன் இயங்குவதாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

பழைய இயங்கு தளங்களுடன் இயங்கி வரும் கணினிகளை எளிதாக வைரைஸ் தாக்கில் விவரங்களைத் திருட முடியும் என்ற நிலையில் பொதுத் துறை வங்கிகளின் 74 சதவீதம் ஏடிஎம் மையங்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தின் கீழ் தான் இயங்கி வருகிறன.

ரான்சம்வேர் வைரைஸ்

சென்ற வருடம் கூட ரான்சம்வேர் வைரைஸ் ஒன்று இந்திய வங்கி ஏடிஎம் மையங்களைத் தாக்கி மிகப் பெரிய டெபிட் கார்டு மோசடி நடைபெற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்திய வங்கிகள் இன்னும் அதில் மாற்றங்களைக் கொண்டு வரவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

பின் எண் மாற்றம்

இதன் பிறகு தான் இந்தியாவின் அனைத்து வங்கிகளும் ஏடிஎம் பின் எண்ணை முடிந்தவரை அடிக்கடி மாற்றுங்கள் என்றும் கோரிக்கை வைக்க துவங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் 2019 ஜூன் மாதத்திற்குள் புதிய இயங்கு தளத்துடனான ஏடிஎம் இயந்திரங்களை அமைக்க வேண்டும் என்று சுற்று அறிக்கையும் ஏற்கனவே அனுப்பி உள்ளது.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு எக்ஸ்பி இயங்கு தளத்தினை முழுமையாக நிறுத்திவிட்டு அதற்கான உதவிகளையும் முழுமையாக நீக்கியுள்ள நிலையில் இந்திய வங்கிகள் இன்னும் அதில் மாற்றம் செய்யாதது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அபாயம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பி இயங்கு தளத்திற்குக் கடந்த 4 வருடங்களாக எந்த ஒரு புதுப்பிப்புகளையும் வழங்காத நிலையில் பாதுகாப்பு அம்சங்கள் மிக மோசமான நிலையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

74% PSU bank ATMs Under Fraud Risk