21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்!

பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனம், ஒரு வீடு, பி.எம்.டபிள்யூ கார் என 21 வயதில் ஆடம்பர சவாரிகளில் திளைத்துக் கொண்டிருக்கிறான். கேரளாவில் கண்ணூரைச் சேர்ந்த அந்த இளைஞனின் பெயர் டி.என்.எம் ஜாவித்.. வயது 21 தான் ஆகிறது, கடவுள் ஆசீர்வதித்தாரோ இல்லையோ, கணினி அவனை ஆசீர்வதித்தது.

கடின உழைப்பாலும், நம்பிக்கையாலும் வெற்றி பெற்ற அந்த இளைஞன், இந்திய வரைபடத்தில் இடம்பெறாத ஒரு சிற்றூரில் பிறந்தவன். துடிப்பும், ஆர்வமும் மிக்க அந்த இளைஞனின் வெற்றிக்கதை பிரமிப்பை ஏற்படுத்துகிறது. யார் அவர்,

இன்று டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.என்.எம் ஜாவித். பலகோடி ரூபாய் மதிப்புள்ள இக் காமர்ஸ்(இணைய வணிகம்) வெப் டிசைனிங் (வலை வடிவமைப்பு), ஆப் டெவலப்மெண்ட் (செயலி உருவாக்கம் ) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கையாளும் இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

இந்த அசாத்தியமான சாதனையை எப்படிச் செய்ய முடிந்தது என்று கேள்வி எழலாம். தான் கடந்து வந்த பாதை குறித்து அவரே பதில் அளித்துள்ளார். அது இன்னும் சுவாரசியமாக இருக்கிறது.

அப்பாவின் பரிசு - கம்ப்யூட்டர்

10 வயதான அந்த அந்த இளம்பிராயத்தில் இணையத் தொடர்புகளுடன் அவரது அப்பா ஒரு கம்ப்யூட்டரை பரிசாக வழங்கியுள்ளார். அதனை ஆக்கப்பூர்வமாகவும், சாத்தியமுள்ள வழிகளில் எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார் அந்த 10 வயது சிறுவன். முகமது ஜாவித் டி.என் என்ற இயற் பெயரில் அவனுடைய ஒரு ஜிமெயில் அக்கவுண்டை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

யூசர் ஐ.டி - நல்ல ஆரம்பம்

அப்போது இதே பெயரில் யூசர் ஐ.டி கிடைக்காமல் திணறி இருக்கிறேன். அந்தச் சமயத்தில்தான் டி.என்.எம் ஜாவித் என்று கூகிள் பரிந்துரைத்தது. இந்தப் பெயரை என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமான ஒரு நல்ல ஆரம்பம் கிடைத்து விட்டதாகக் கருதினேன்

கம்ப்யூட்டருக்கு அடிமையில்லை

ஆரம்பத்தில் ஆர்குட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்(சோசியல் நெட் வொர்க் ) என்னால் இம்சைக்குள்ளாயின. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். பள்ளி நேரம் தவிர வெப்சைட்யை உருவாக்குவது பலமணி நேரங்களைக் கடத்தினேன். இதை நீங்கள் கம்ப்யூட்டருக்கு அடிமையாகி விட்டதாகக் கருத வேண்டாம். நான் பயனுள்ள வழிகளில் பயன்படுத்தினேன்.

வலை வடிவமைப்பில் தேர்ச்சி

அதற்குப் பிறகு அடிப்படையாக உள்ள வலைப் பதிவிடல் பக்கங்கள் (பிளாக்கிங்), வலை வடிவமைப்பை( வெப்சைட்) உருவாக்குவது குறித்துக் கற்றுத் தேர்ந்தேன். எனக்காகப் பல பிளாக்ஸ் உருவாக்கினேன். அப்போது என்னுடன் 10 ஆம் வகுப்பு படித்த எனது நண்பர் ஸ்ரீராக்குக்கு ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொடுத்தேன். நானும், அவனும் வெப் தொடர்பான விஷயங்களில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால் டாட் காம் டொமைன் வாங்க எங்களிடம் பணம் இல்லாததால், ப்ரீ டொமனை எங்கள் பசிக்கு பயன்படுத்துக கொண்டோம்

நம்பர் ஒன் ஸ்டூடண்ட்

இந்த முயற்சிகள் அனைத்தும் பள்ளிப் படிப்பை பாதிக்கவில்லை என்று கூறியுள்ள ஜாவித், வகுப்பில் நம்பர் ஸ்டூடண்டாகவே இருந்ததாகக் கூறுகிறார். விடுமுறை காலங்களில் வெப்சைட் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

வெப்சைட் விலை நிர்ணயம்- விளம்பரம்

காலப்போக்கில் வலைத்தள அபிவிருத்திக்கு வரவேற்பு இருந்ததை உணர்ந்த ஜாவித், டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். ஆயிரம் ரூபாயில் வெப்சைட் உருவாக்கித் தரப்படும் என முகநூலில் விளம்பரம் செய்ததாகக் கூறிய அவர், தனது வெப்சைட் உருவாக்கத்தில் பல்வேறு குறைகள் இருந்ததால் புகார்களைச் சந்திக்க வேண்டி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் உதவி- முறையான பயிற்சி

இந்தக் காலக்கட்டத்தில்தான் தொழில்நுட்ப அறிவு போதிய இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். கண்ணூரில் உள்ள வெப் டிசைனிங் கம்பெனிகளுக்குச் சென்றேன், அங்கு அவர்களின் வேலையைப் பார்த்தேன். சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவைப் பார்த்த ஆசிரியரின் வடிவில், ஒரு எதிர்காலம் எனக்குக் காத்திருந்தது. வலை வடிவமைப்பாளராக உள்ள தனது சகோதரரை கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நிதி நெருக்கடி - அம்மா அதிர்ச்சி

டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசன் நிறுவனத்தின் முதல் வெப்சைட்டை உருவாக்கிக் கொடுத்து, ஆசிரியரிடம் இருந்து முதல் வெகுமதியைப் பெற்றேன். இதில் கிடைத்த 2500 ரூபாயை என் தாயிடம் வழங்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் துபாயில் வங்கியில் வேலை பார்த்த தந்தை இந்தியா திரும்பியதால், நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி பொருளாதார ரீதியாக மோசமடைந்தது. அப்போதுதான் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கம்பெனியைத் தொடங்க அப்பா உதவி செய்தார்.

 

சம்பளத்துக்கு வேலை

நிதிநெருக்கடி ஏற்பட்ட இடைக்காலத்தில் கண்ணூரில் உள்ள ஐ.டி.அகாடமியில் சேர்ந்த ஜாவித்தின் வேலை நேர்த்தியைப் பார்த்து ஒரு சாப்ட்வேர் இன்ஜியருக்கு நிகரான சம்பளம் வழங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தில் இருந்த தனது ஆசிரியைகளான ஜிபின், டெனிலுக்கு அவர் நன்றி சொல்கிறார்.

17 வயதில் நிறுவனர் - 21 வயதில் கோடீஸ்வரன்

பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்த ஜாவித், 2013 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி சௌத் பஷாரில் டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசனை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 17. பள்ளியில் இருந்து திரும்பியதும் அலுவலகத்தில் இரவு 9 மணி வரை வேலை பார்த்தார். இன்று கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார்.

Have a great day!
Read more...

English Summary

Kerala Youngster Puts Google to Good Use, Becomes Millionaire at 21!