பார்தி ஏர்டெல் ஜூன் காலாண்டு அறிக்கை வெளியீடு.. வருவாய் 97 கோடி ரூபாயாகச் சரிவு!

இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் வியாழக்கிழமை 2018-2019 நிதி ஆண்டில் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் பார்தி ஏர்டெல்லின் லாபம் 73.51 சதவீதம் சரிந்து 97.30 கோடி ரூபாயாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Advertisement

இதுவே சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 367.30 கோடி ரூபாயாகப் பதிவு செய்து இருந்தது.

Advertisement

2017-2018 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 21,958.10 கோடி ரூபாய் வருவாயினைப் பார்தி ஏர்டெல் ஈட்டியிருந்த நிலையில் 2018-2019 நிதி ஆண்டில் 20,080 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளது.

சென்ற நிதி ஆண்டில் 280.60 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்த பார்தி ஏர்டெல் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 1,457.20 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளது.

English Summary

Bharti Airtel Q1 profit plunges Rs 97 crore
Advertisement