வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு..!

2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியினைத் தாக்கல் செய்யக் கடைசித் தேதி 2018 ஜூலை 31 என்று இருந்த நிலையில் அதனை 2018 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

2018-2019 மதிப்பீடு ஆண்டில் வருமான வரித் தாக்கலினை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற நிலையில் ஆவார்களுக்குக் காலக்கெடு நீட்டிப்பு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

2018 டிசம்பர் 31-ம் தேதிக்குள் வருமான வரித் தாக்கலினை செய்தால் 5,000 ரூபாய் வரை அபராதமும், அதற்குப் பிறகு என்றால் 10,000 ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் தனிநபர் ஒருவரின் வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவு என்றால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Income Tax Returns filing deadline extended by one month to 31 August 2018