அமெரிக்க அலுமினியம் உற்பத்தி நிறுவனத்தினை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் பிர்லா!

பிர்லா குழுமத்தின் இண்டல்கோ நிறுவனம் அதன் துணை நிறுவனமான நோவோலிஸ் கீழ் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பாட்டு வரும் அலுமினிய உற்பத்தி நிறுவனமான அலரிஸ் கார்ப்பரேஷனை 2.58 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க முடிவு செய்துள்ளது.

நோவோலிஸ் நிறுவனத்தினை 10 வருடத்திற்கு முன்பு ஆதித்யா குழுமத்தின் இண்டல்கோ நிறுவனம் வாங்கிச் சர்வதேச அலுமினிய சந்தையில் இடம்பிடித்தது. தற்போது அலரிஸ் கார்ப்பரேஷனை வாங்குவதன் மூலம் ஆதித்யா குழுமம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வதைக் காட்டுகிறது.

ஆசிய சந்தை டு சர்வதேச சந்தை

ஆசிய சந்தையில் அலுமினிய உற்பத்தியில் சிறந்த நிறுவனம் என்ற பெயரை நோவோலிஸ் பெற்று இருந்த நிலையில் அலரிஸ் கார்ப்பரேஷன் கையகப்படுத்தல் முடிவினை அடுத்து உலகின் தலை சிறந்த அலுமினியம் உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனம் என்ற பெயரையும் பெற இருக்கிறது.

அலெரிஸ்

அலெரிஸ் நிறுவனம் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் ஏற்கனவே தனது வர்த்தகத்தினைச் செய்து வருகிறது. தற்போது நோவோலிஸ் உடன் இணைவதன் மூலம் விமானத்திற்கான அலுமினிய உற்பத்தி போன்றவை புதிய அனுபவத்தினைப் பெற உள்ளது.

சீனா- அலெரிஸ்

சர்வதேச அளவில் அலுமினிய உற்பத்தியில் சீனாவில் உள்ள அலெரிஸ் பிரிவு தான் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியினைப் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அலுமினிய உற்பத்தி

இந்திய அலுமினிய பொருட்கள் உற்பத்தி எல்லாம் கட்டுமான துறைகளுக்கு ஏற்றவாறு மட்டுமே உள்ள நிலையில் அலெரிஸ் கார்ப்ரேஷனை கையகப்படுத்துவது மிகப் பெரிய வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

Kumar Mangalam Birla To Acquire US Based Aleris Corp For $2.6 Billion