விமான டர்பைன் எரிபொருளை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரும் எண்ணம் இல்லை: மத்திய அரசு

28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போது விமான டர்பைன் எரிபொருளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நிறைவேறவில்லை. அது மட்டும் இல்லாமல் விமான டர்பைன் எரிபொருளினை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி

பாராளுமன்றத்தில் புதன்கிழமை விமான டர்பைன் எரிபொருள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படுமா என்று கேட்ட போது சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஜெயந்த் சின்ஷா தற்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

சுரேஷ் பிரபு

விமான டர்பைன் எரிபொருள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டால் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உள்ளீட்டு வரி திருப்பி அளிக்கும் செலவு குறையும் என்று சுரேஷ் பிரபு தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் செலவு

விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் செய்யும் செலவில் 35 முதல் 45 சதவீதம் விமான டர்பைன் எரிபொருளுக்காக மட்டுமே என்பது முக்கியமானது ஆகும்.

எவ்வளவு செலவு குறையும்?

விமான டர்பைன் எரிபொருள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டால் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு 3,000 முதல் 5,000 கோடி ரூபாய் வரை செலவுகள் குறையும் எனப்படும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

No Proposal To Include Aviation Turbine Fuel Under GST: Jayant Sinha