ஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. வெளிநாட்டு விமான பயணங்கள் 2,510 ரூபாய் முதல்..!

குறைந்த விலையில் ஏர்ஏசியா இந்தியா விமானப் பயணச் சேவையினை வழங்கி வரும் நிலையில் சர்வதேச விமானக் கட்டணங்களை 2,510 ரூபாய் எனச் சலுகை விலையில் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் சலுகை விலை டிக்கெட்களை airasia.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்வதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்றும் ஏஏசியா குறிப்பிட்டுள்ளது.

சலுகை காலம்

2018 நவம்பர் 1 முதல் 2019 ஆகஸ்ட் 13 வரையிலான வெளிநாட்டு விமானப் பயணங்களைச் செய்ய விரும்புபவர்கள் 2018 ஜூலை 29-ம் தேதிக்குள் இந்தச் சலுகை விலை டிக்கெட்களைப் பெற முடியும்.

சர்வதேச கட்டண சலுகை உள்ள வழித்தடங்கள்

டெல்லி, அம்ரிஸ்டஸ், புவனேஷவர் மற்றும் பிற இடங்களில் இருந்து கோலா லம்பூர், சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிற இடங்களுக்குப் பயணம் செய்ய இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் கிடைக்கும்.

உள்நாட்டு விமானப் பயணங்கள்

வெளிநாட்டுப் பயணங்கள் போன்றே உள்நாட்டு விமானப் பயணங்களுக்கும் ஏர்ஏசியா இந்தியா கட்டண சலுகைகளை வழங்கி வருகிறது.

ரூ.1,399 ரூபாய் சலுகை

ஏர்ஏசியா இந்தியா உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 1,399 ரூபாய் முதல் கட்டணம் என்று அறிவித்துள்ள நிலையில் இந்தச் சலுகையில் 2018 அக்டோபர் 31 வரையிலான பயணங்களுக்கு 2018 ஜூலை 19-ம் தேதிக்குள் டிக்கெட்டினை புக் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விமானப் பயணச் சலுகை உள்ள வழித்தடங்கள்

பெங்களூரு, டெல்லி, ராஞ்சி, ஜெய்ப்பூர், புனே மற்றும் கொச்சி போன்ற வழித்தடங்களில் உள்நாட்டு விமானப் பயணச் சலுகை டிக்கெட்கள் கிடைக்கும் என்றும் ஏர்ஏசியா அறிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

AirAsia International Flight Tickets Offer From Rs 2,510