டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70-ஐ தொட்டால் இந்தியா சமாளிக்குமா? அல்லது ஆர்பிஐ உதவியை நாடுமா?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த ஒரு மாதமாகச் சரிந்து வருவதால் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை ஒன்று உருவாகியுள்ளது.

கரன்சி வல்லுநர்களும் அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு இன்னும் 6 முதல் 8 மாதத்தில் 70 ரூபாயினைத் தொட வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.

ரிசர்வ் வங்கியால் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க முடியும், ஆனால்?

ஒரு நாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளதா என்பதை ரூபாய் மதிப்பு மூலமே தெரிந்துகொள்ள முடியும். அதன் பிறகே வெளிநாட்டு முதலீடுகளும் குவியும். ரூபாய் மதிப்பு உயர்ந்தால் இந்திய பொருளாதாரம் உயரும் அல்லது வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் கிடைக்கும். 2014-ம் ஆண்டு முதல் ரூபாய் மதிப்பு நிலையான ஒன்றாக இருந்து வந்த நிலையில் பிற ஆசிய நாணயங்களைப் போன்று கடந்த சில மாதங்களாக நிலைதன்மை அற்றதாக மாறியுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரியும் போது எல்லாம் ஆர்பிஐ அதில் தலையிட்டு வருகிறது, எனவே ரூபாய் மதிப்பு சரிவை அது அதிகரிக்க விடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவானது ஏற்றுமதியினை அதிகரிக்கும். ஆர்பிஐ வசம் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்கு வழிகள் இருந்தாலும் அதனைத் தேவைப்படும் வரை பயன்படுத்தாது. எனவே இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் மாற்றங்கள் தான் ரூபாய் மதிப்பினை காப்பாற்றுவதற்காகத் தற்போது உள்ள ஒரே வழியாகும் என்றும் ஆக்சிஸ் வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணரான சவுகதா பட்டாச்சார்யா கூறுகிறார்.

 

ரூபாய் மதிப்பு சரிவை தடுக்கக் கூடாது..!

ரூபாய் மதிப்பு என்ன ஆகும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதன் போக்கில் அது செல்லட்டும் அதனைத் தடுத்தால் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலினை இந்தியா சந்திக்க நேரிடும். அதே நேரம் இந்தியாவின் இறக்குமதி பெறும் அளவில் பாதிக்கப்படும். வர்த்தகப் போர் சூழல் தற்போது தணிந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பொருளாதரம் இருந்த நிலையினை விடத் தற்போது மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிலையானதாகவும் உள்ளது. இறக்குமதிக்கு இணையான ஏற்றுமதியைச் செய்வது தான் ரூபாய் மதிப்புச் சரிவில் இருந்து தப்பிக்கச் சரியான வழியாக இருக்கும் என்றும் முதன்மை பொருளாதார நிபுணரான டி கே ஜோஷி தெரிவித்துள்ளார்.

ரூபாய் மதிப்புச் சரிவு பணவீக்கத்தை அதிகரிக்கும்

ரூபாய் மதிப்பு சரிவை குறைப்பதற்காக அடிப்படை பணிகளைச் செய்ய வேண்டும். ஏற்ற இறக்கங்களைத் தவிற்க வேண்டும். ருபாய் மதிப்பு சற்று சரிய வேண்டும். எங்கு நிதானமான சரிவு உள்ளதோ அங்குப் பயம் இருக்காது. அதே நேரம் பண வீக்கம் அதிகரிக்கும். நிலையான ரூபாய் மதிப்பு மற்றும் அதிகப் பண வீகம் இருப்பத தான் மிகப் பெரிய பிரச்சனை.எனவே இந்தச் சரிவானது ஏற்றுமதியை ஊக்குவிக்கும். எனவே ரூபாய் மதிப்பு சரிவை முழுமையாகத் தடுப்பது சரியானது அல்ல என்றும் திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினரான அபிஜித் சென் தெரிவித்துள்ளார்.

சில துறைக்குக் கெட்டது, சிலை துறைக்கு நலலது

ரூபாய் மதிப்புச் சரிவு என்பது சில துறைகளுக்குப் பதிப்பு ஏற்படுத்தும் அதே நேரம் சில துறைக்கு நன்மையினையும் அளிக்கும். இயற்கை போன்றே சிலவற்றுக்கு இது நல்லது தான். நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு மற்றும் பணவீக்கம் உயர்வு போன்றவற்றில் நேரடியாகத் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஏற்கனவே வல்லுனர்கள் மற்றும் கரன்சி ஆய்வாளர்கள் இன்னும் 6 முதல் 8 மாத்தில் டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பு 70-ஐ தொடும் என்று கணித்துள்ளனர்.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி இருப்பு குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அரசியல் தலைவர்கள் இறக்குமதிகள் குறித்துச் சரியான முடிவினை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

 

Have a great day!
Read more...

English Summary

Can India afford the rupee crossing 70 mark or should the RBI boost the currency?