வருங்கால வைப்புச் சந்தாதார்கள் அதிக லாபம் பெறக்கூடிய புதிய வாய்ப்பு..!

தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை விருப்பத்துக்கு ஏற்றவாறு பங்குச்சந்தை, அரசாங்கப் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்வதற்கான திட்டங்களை, தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதலீட்டுத் திட்டங்கள்

வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்வதற்கு வசதியாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வரைவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. அரசு பத்திரங்கள், பங்கு சந்தை, கடன் முதலீடு திட்டங்கள், கரன்சி சந்தை போன்ற முதலீட்டுத் திட்டங்களில் விருப்பத்திற்கு ஏற்றவாறு இணைந்து கொள்ள விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையாக, வருங்கால வைப்பு நிதி முதலீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

விருப்ப உரிமை

இதன் மூலம் ஈக்விட்டியில் முழுமையான தொகையையோ, பகுதி தொகையையோ முதலீடு செய்து கொள்ளலாம். அரசாங்கப்பத்திரங்கள் மற்றும் கடன் கருவித் திட்டங்களிலும் ஒட்டுமொத்த முதலீடுகளும் அமையலாம். அவரவர் துணிச்சலைப் பொறுத்து பங்குச் சந்தைகளை முதலீடு செய்யச் சந்தாதார்களுக்கு வாய்ப்பு வழங்கவுள்ளது. சந்தாதார்களின் கருத்தைக் கேட்டபிறகு வரைவுத்திட்டத்துக்கு அனுமதியளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய திட்டம்

தற்போதைய நிலையில் நிதியமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைப்படி, வருங்கால வைப்பு நிதியில் 50 விழுக்காட்டை மட்டும் அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் எனக் கூறியுள்ளது.45 விழுக்காடு வரை கடன் முதலீடு திட்டங்கள் . 15 விழுக்காடு வரை பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து கொள்ளலாம் என அனுமதித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Govt mulls giving PF subscribers choice of investment pattern