ஜிஎஸ்டி வரிக் குறைப்பு: இன்று முதல் இந்தப் பொருட்களின் விலை எல்லாம் குறையும்.!

சானிட்டரி நாப்கின், காலணிகள், குளிர் சாதன பெட்டி உள்ளிட்ட 88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகித குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சனிக்கிழமை நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான 28 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28% வட்டி விகிதத்தின் கீழ் இருந்த பல பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது.

மேலும் இந்த வரி விகித குறைப்பு ஜூலை 27 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்த நிலையில் எந்தப் பொருட்களின் விலை எல்லாம் இன்று முதல் குறைகிறது என்ற முழுப் பட்டியலினை இங்குப் பார்க்கலாம்.

28%-ல் இருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருட்கள்

குளிர்சாதனப் பெட்டிகள், வாட்டர் ஹீட்டர், வாஷிங் மெஷின், 27 இஞ்ச் வரையிலான டிவி, வேக்கம் கிளீனர், பெயிண்ட், முடி வெட்டும் சேவர்கள், ஹேர் கர்லர், முடி உலர்த்திகள், செண்ட், ஸ்ப்ரே, லித்தியம் பேட்டிரிகள்.

18%-ல் இருந்து 12% ஆகக் குறைக்கப்பட்ட பொருட்கள்

ஹேண்ட் பேக், பர்ஸ், நகை பெட்டி, மர பிரேம்கள், கண்ணடிகள், கெரோசின் அடுப்பு, அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் இரும்புகள்.

5% வரி விகிதத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள பொருட்கள்

பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பயன்படுத்தும் எத்தனால், தரை விரிப்பான்கள், கையில் தயாரிக்கப்பட்ட ஜடை மற்றும் அலங்கார துணிகள்.

வரி விலக்குப் பெற்ற பொருட்கள்

சானிட்டரி நாப்கின், ராக்கி, துடப்பம் மற்றும் அதற்கான மூலதன பொருட்கள், சால் இலைகள், செறிவூட்டப்பட்ட பால் போன்றவற்றுக்கு இன்று முதல் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

GST rate cut: These items will get cheaper from today