இந்தியா வேண்டாம்.. வெளிநாடுகளுக்கு பறக்கும் இந்திய உணவகங்கள்.. காரணம் என்ன?

இந்தியாவில் முதலீடுகளைக் குவிப்பதற்கான சூழல் இல்லை என்று பொதுவான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஒப்புதல் பெறுவதற்கு வகுக்கப்பட்டுள்ள கடினமான விதிமுறைகளும், ஜனநாயக உரிமைகளுக்கான புறச்சிக்கல்களும் இதனைச் சாத்தியப்படுத்தவில்லை. இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலாளிகள் தயங்கி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள பெரிய உணவகங்களும் வெளிநாடுகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன.

வெளிநாடுகளுக்குச் சென்ற உணவகங்கள்

ஜிக்ஸ் அண்ட் சோலாவார் கர்வார், தேவ்யானி இண்டர் நேஷனல் போன்ற பெரிய உணவகங்கள் லண்டன், துபாய், அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் தொழிலை விரிவுபடுத்தி வருகின்றன. லைட் பைட் என்ற நிறுவனம் வாஷிங்டன் டி.சியில் ஒரே நேரத்தில் 150 பேருக்கு விருந்தோம்புகிற வகையில் உணவகத்தைத் திறந்துள்ளது. ஏசியாவிலும் தன் வணிகத்தைத் தொடங்கியுள்ள அது, குவைத், துபாய், ஜெட்டா உள்ளிட்ட நாடுகளில் உணவகங்களை நிறுவ உள்ளது.

கவர்ச்சிகரமான வளர்ச்சி விகிதங்கள்

கவர்ச்சிகரமான வளர்ச்சி விகிதங்களும், எளிமையான சட்டதிட்டங்களும் இவற்றின் முதலீட்டு ஆசைகளை அதிகரித்துள்ளன. உரிமம் பெறுவதில்
வகுக்கப்பட்டுள்ள பல கட்டச் சிக்கல்களால் இந்தியாவில் வணிகம் செய்ய அவர்கள் விரும்பவில்லை. உணவகம் போன்ற விருந்தோம்பல் துறையில், இந்திய முதலீடுகளை வெளிநாடுகள் வெகுவாகக் கவர்ந்து இழுப்பதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்.

எளிமையான சட்ட திட்டங்கள்

இந்தியாவை விட வெளிநாடுகளில் உணவகங்களைத் திறப்புது எளிமையாக உள்ளது. விற்பனையில் குறிப்பிட்ட இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் காரணமாகும். விசாக்கள்(இசைவுச் சீட்டுக்கள் ) மற்றும் மனிதவள ஆற்றலை பெறுவது வெளிநாட்டுச் சட்டதிட்டங்களில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. தரமான இந்திய உணவுகளுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவும் பற்றாக்குறைகளால், வணிகம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்திய உணவுகளுக்கு மதிப்பு

இந்தியாவிற்கு வெளியில் வருமானத்தை ஈட்டுவதற்கு வசதியாக இந்திய பிராண்டுகளுக்கு மதிப்பு அதிகமாக இருக்கிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் இந்திய உணவுகளுக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் உலகளாவிய அளவில் வாடகை வசூலிக்கப்படுகிறது. வெளிநாடுகளை ஒப்பிடும்போது வருவாய் முரண்பாடுகளும் அதிகமாக இருக்கின்றன.

உணவக உரிமையாளர்களின் கருத்து

இந்தியாவைவிட வெளிநாடுகளில் வாங்கும் திறன் அதிகமாக இருக்கிறது. வாடகை செலுத்துவதற்கு அதிகமாகவே லாபம் ஈட்ட முடிகிறது என்கிறார் பார்சி கபே உணவகத்தின் உரிமையாளர். இந்தியாவில் உணவகங்களைத் தொடங்குவதில் நெறிமுறைகளும், உரிமங்களைப் பெறுவதிலும் சிக்கல் இருப்பதாக லைட் பைட் நிறுவனத்தின் இயக்குநர் அகர்வால். அதேநேரம் வெளிநாடுகளில் 50 சதவீதம் லாபம் ஈட்ட முடியும் என்பதும் அவர்கள் கருத்தாக உள்ளது.

இந்தியாவில் ஏற்பட்ட சிக்கல்

கடந்த 12 முதல் 18 மாதங்களில் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த பல்வேறு காரணிகள் உணவுத்துறையைப் பாதித்துள்ளன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, புதிய உணவகங்களைத் திறப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், உணவுப் பணவீக்கம், அதிகரிக்கப்பட்ட கட்டட வாடகைகள் ஆகியவை பெருமளவு வருவாயைப் பாதித்தன. இதுதவிர நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் உரிமம் பெற்ற ஓட்டல்களில் சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்தது. இங்கு உணவகங்கள் மூடப்பட்டு வரும்போது, கடந்த ஆண்டு அமெரிக்காவில் 48 சதவீதம் பணத்தை உணவகங்களில் செலவிட்டுள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Indian restaurants step out for a bigger bite of overseas markets. Why?