குர்குரேவில் பிளாஸ்டிக் உள்ள என்ற வதந்திகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்ற பெப்ஸிகோ..!

குளிப்பானதிற்குப் பேர் போன பெப்ஸிகோ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பேஸ்புக், யூடியூப் மற்றும் டிவிட்டர் தளங்களில் தங்களது தயாரிப்பான குர்குரேவில் பிளாஸ்டிக் கலந்து இருந்தாக வதந்திகள் அதிகளவில் பரவி வருகிறது இதற்கு இந்த நிறுவனங்கள் எங்களுக்கு 2.10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மே மாதம் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கினை விசாரித்துத் தீர்ப்பு அளித்த உயர் நீதிமன்றம் குர்குரே பொருட்கள் மீதான வதந்தியாகப் பரவி வரும் இந்த இணைப்புகள் எல்லாம் கண்டறிந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

சமுக வலைத்தள இணைப்புகள்

பெப்ஸிகோ நிறுவனம் குர்குரே மிது வதந்திகள் பரப்பி வருவதாக 3,412 பேஸ்புக் இணைப்புகள், 20,244 பேஸ்புக் பதிவுகள், 242 யூடியூப் விடியோக்கள், 6 இன்ஸ்டாகிராம் இணைப்புகள், 562 டிவிட்கள் போன்றவற்றுக்கு எதிராக இந்த நஷ்ட ஈடு வழக்கினை தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வதந்தி

பல வருடங்களாகவே பெப்ஸிகோவின் குர்குகே நிறுவனத்தின் தயாரிப்புகளில் பிளாஸ்டிக் இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு குர்குரே உள்ளிட்ட சில குப்பை உணவுகளைத் தடை செய்வதாகவும் உத்திர பிரதேச அரசு தெரிவித்து இருந்தது.

குர்குரே இந்தியாவின் வருவாய்

குர்குரே நிறுவனத்தின் மீது வதந்திகள் பரவி வந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் அதிகரித்துக்கொண்டு தான் வந்துள்ளது. 2010-ம் ஆண்டு 601 கோடி ரூபாயும், 2013-ல் 885 கோடி ரூபாயும், 2015 செப்டம்பர் மாதம் வரை 1159.3 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

குர்குரே

குர்குரே நிறுவனத்தின் பிறாண்டுக்கெனத் தனி மரியாதை உள்ளது. அதனைத் தடுக்கும் படி இந்தப் போலி செய்திகள் சமுக வலைத்தளங்களில் ஊடுருவி வர்த்தகத்தினைப் பாதித்து வருகிறது என்றும் பெப்சி கூறுகிறது.

செலவு - பலன்

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து குர்க்குரே-க்கு எதிரான இந்தச் சமுக வலைத்தள இணைப்புகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், வரும் நாட்களில் தங்களது தயாரிப்புகள் எதிரான போலி செய்துகள் குறித்துச் சமுக வலைத்தளங்களைத் தொடர்ந்து கண்கானிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

PepsiCo gets Facebook, Twitter, youtube to remove 'plastic' jokes on Kurkure