பாரத்மாலா திட்டத்தின் கீழ் 6,320 கிலோ மீட்டர் சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி!

பாரத்மாலா திட்டத்தின் கீழ் 1.44 லட்சம் கோடி செலவில் 6,320 கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகளை அமைப்பதற்காக அனுமதிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நித்தின் கட்காரி மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பாரத் மாலா திட்டத்தின் கீழ் 84,000 கிலோ மீட்டர் தொலைவிற்குச் சாலைகளை அமைக்க 7.50 லட்சம் கோடி வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

பேஸ் 1

பாரத் மாலா திட்டத்தின் பேஸ் 1-க்கு 5,35,000 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் 6,320 கிலோ மீட்டர் தொலைவிலான சாலை அமைக்க 1,44,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேஸ் 1 திட்டம் முழுமையாக நிறைவேற 2021-2022 நிதி ஆண்டு வரை இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

சாலை அளவு

பேஸ் 1-ன் கீழ் 34,800 கிலோ மீட்டர் தொலைவிலான சாலை அமைக்கப்படு. அதில் 10,000 கிலோ மீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலையும் சேர்த்து அடங்கும்.

கண்காணிப்பு

பாரத் மாலா திட்டத்தின் பேஸ் 1-க்கான பணிகள், சிவில் பணிகள் எல்லாம் தீவிர கண்காணிப்பில் இருக்கிறது என்றும் கட்காரி தெரிவித்துள்ளார்.

எதற்கு இந்தப் பாரத்மாலா?

மேலும் 2,000 கிலோ மீட்டர் எல்லை ஓர சாலை மற்றும் சர்வதேச இணைப்புக்கு ஏற்றவாறு உள்ளூர் சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெறும் என்றும் இது உள்நாட்டுப் போக்குவரத்தினை வலுப்படுத்த கூடிய சாலைத் திட்டமாகும் என்று கட்காரி குறிப்பிட்டுள்ளார்.

Have a great day!
Read more...

English Summary

Projects for 6,320 km roads awarded under Bharatmala: Nitin Gadkari