2001க்குப் பின் முதல் முறையாக நஷ்டமடைந்த ஐசிஐசிஐ வங்கி

இந்திய தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கி 2001ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக ஜூன் காலாண்டில் நஷ்டம் அடைந்துள்ளது.

Advertisement


ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி 119.55 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 2,049 கோடி ரூபாய் லாபத்தை அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இக்காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி 1,306 கோடி ரூபாய் லாபத்தைப் பெறும் என கணிக்கப்பட்டது. ஜூன் காலாண்டில் மொத்த வட்டி வருமானமாக 6,102 கோடி ரூபாய் பற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 5,590 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் மார்ச் காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வராக் கடன் அளவு 9.9 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் காலாண்டில் 9.65 சதவீதமாகக் குறைந்துள்ளது.

English Summary

ICICI Bank Reports Its First Net Loss Since 2001
Advertisement