கணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..!

நாட்டின் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி 2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 10 சதவீத லாபத்தைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ஜஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் சிகரெட் மீது அதிக வரி விதிப்பின் காரணத்தால் ஐடிசி அதிக வருவாயும் லாபத்தையும் அடைந்துள்ளது.

லாபம்

ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ஐடிசி நிறுவனம் 2,818.68 கோடி ரூபாய் லாபத்தையும், 18,171.66 கோடி ரூபாய் விற்பனையையும் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை அளவு கடந்த வருடத்தை விடவும் சுமார் 13.5 சதவீதம் அதிகமாகப் பெற்றுள்ளது.

சிகரெட்

சிகரெட் விற்பயில் மட்டும் ஜூன் காலாண்டில் ஐடிசியின் செயலாக்க லாபம் 8.7 சதவீதம் அதிகரித்து 3,558.39 கோடி ரூபாய் பெற்றுள்ளது, ஆனால் ஐடிசி நிறுவனத்தின் பிற வர்த்தகப் பிரிவில் இருந்து லாபத்தின் அளவு அதிகளவில் குறைந்த காரணத்தால் மொத்த லாப அளவுகள் சரிந்துள்ளது.

பிற வர்த்தகம்

சிகரெட் அல்லாத பிற பொருட்களின் வர்த்தகத்தின் மூலம் வரிக்கு முந்தைய லாபமாக 127.76 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.

ஹோட்டல்

ஐடிசி நிறுவனத்தின் ஹோட்டல் வர்த்தகம் இக்காலாண்டில் சுமார் 12 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலாண்டில் ஹோட்டல் வர்த்தகம் மூலம் சுமார் 341.28 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது.

Read more about: itc q1 profit loss

Have a great day!
Read more...

English Summary

ITC Q1 profit rises 10% to ₹ 2,819 crore - Tamil Goodreturns