விப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்..!

167 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஐடித்துறையில் கடந்த 6 வருடங்களாக அதிகளவிலான மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், ஜூன் காலாண்டில் டாப் 5 ஐடி நிறுவனங்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி ஷிவ் நாடார் தலைமையிலான ஹெச்சிஎல் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜூன் காலாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் 0.8 சதவீதம் அதிகரித்து 2.05 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.

இதுவே விப்ரோ நிறுவனம் இதே காலாண்டில் டாலர் வருவாயில் 1.7 சதவீதம் வரையில் சரிந்து 2.03 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.


2018ஆம் நிதியாண்டில் முழுவதுமாக விப்ரோ 8.06 பில்லியன் டாலர் வருவாயும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 7.84 பில்லியன் டாலர் வருவாய் மட்டுமே பெற்றுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 10.4 சதவீதம் அதிக டாலர் வருவாய் பெறும் என ஷிவ் நாடார் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் 2019ஆம் நிதியாண்டில் ஹெச்சிஎல் சுமார் 8.65 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் வருவாய் அடிப்படையில் பார்க்கும் போது தற்போது டிசிஸ், இன்போசிஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஹெச்சிஎல் 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

HCL Tech displaces Wipro as India’s third largest IT firm