மேடு இன் இந்தியா இன்ஜின்களை ராணுவத்திற்கு வழங்கிய நிர்மலா சீதாராமன்..!

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அனைத்து எரிபொருட்களிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த இன்ஜின்களை இந்திய ராணுவத்திற்கு அளித்தார்.


சென்னை ஆவடியில் இருக்கும் ராணுவ உற்பத்தி தளத்தில் பாதுகாப்புத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பின் தலைமையில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆவடியில் இரண்டு வகை இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் குறித்த தரவுகளை இந்திய ராணுவத்தின் துணை தலைமை அதிகாரியான தேவராஜ் அன்பு அவர்களிடம் நிர்மலா சீதாராமன் அளித்தார்.

1000ஹச்பி திறன் கொண்ட V92S2 இன்ஜின் இந்திய ராணுவத்தில் உள்ள டி 90 பீஸ்மா டேங்கிலும், V-46-6 இன்ஜின் T-72 ஆஜேயா டேங்கிலும் பொருத்தப்பட உள்ளது ன தெரிகிறது.

இந்த இன்ஜின் தயாரிக்கப்பட்டது இந்தியாவில் என்றாலும் அதன் டிசைன் ரஷ்யா நாட்டுடையது ன்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Nirmala Sitharaman hands over 'Made in India' engines to Army