10 லட்சம் பேரை இழந்த டிவிட்டர்.. அதிர்ச்சி அளிக்கும் ஜூன் காலாண்டு..!

சமுக வலைத்தளத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழும் பேஸ்புக் 2018ஆம் ஆண்டில் குறைவான பயனர்கள் வளர்ச்சி மூலம் சந்தை மதிப்பீட்டில் சுமார் 130 பில்லியன் டாலர் அளவில் நஷ்டம் அடைந்திருக்கும் இந்நிலையில் பேஸ்புக்கின் சக போட்டி நிறுவனமான டிவிட்டரும் மோசமான காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.


2018ஆம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் பேஸ்புக் பயனர்களின் வளர்ச்சி எண்ணிக்கையில் சரிவை சந்தித்த நிலையில் டிவிட்டர் 10 லட்ச பயனர்களை இழந்துள்ளது.

டிவிட்டர் தளத்தில் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் ஆக்டிவ் யூசர்ஸ் எண்ணிக்கை 336 மில்லியனாக இருந்த நிலையில், 2வது காலாண்டில் 335 மில்லியனாகக் குறைந்துள்ளது.

பயனர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் டிவிட்டர் நிறுவனம் முதல் காலாண்டை விடவும் சுமார் 100 மில்லியன் டாலர் அதிக வருவாய் பெற்றுள்ளது. முதல் காலாண்டில் வெறும் 665 மில்லியன் டாலர் வருவாய் மட்டுமே பற்று இருந்த நிலையில் தற்போது 711 மில்லியன் டாலர் அளவிலான வருவாயைப் பற்றுள்ளது.

இதன் மூலம் டிவிட்டர் கடந்த 3 காலாண்டுகளாகத் தொடர்ந்து லாபத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Twitter loses 1 million monthly users in Q2 2018