ஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. உள்நாட்டு விமான பயணங்களுக்கு 40% வரை சலுகை!

ஏர்ஏசியா இந்தியா நிறுவனமானது புதிய சலுகையாக உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 40 சதவீதம் வரை சலுகை அளிக்கிறது. நிறைய வாங்குக, நிறையச் சேமிங்க என்ற ஏர்ஏசியா இந்தியாவின் இந்தச் சலுகையில் 2018 ஜூலை 31 முதல் 2018 நவம்பர் 30 வரை பயணம் செய்யலாம். ஆனால் 2018 ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் டிக்கெட்களைப் புக் செய்ய வேண்டும்.

வெளிநாட்டு விமானப் பயணங்கள்

ஏர்ஏசியா இந்தியாவானது வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கும் குறைந்த கால விற்பனையாக 40 சதவீத சலுகையினை அளிக்கிறது என்றும் அறிவித்துள்ளனர்.

டிக்கெட் எங்குக் கிடைக்கும்?

ஏர்ஏசியா இந்தியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும்.

கட்டண விதிமுறைகள்

கிரெடிட், டெபிட் அல்லது பிற கார்டுகள் மூலம் டிக்கெட்களைப் புக் செய்த பிறகு ரத்து செய்தால் செயலாக்கக் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படாது. மேலும் டிக்கெட் கட்டணத்தில் விமான நிலைய கட்டணம் மற்றும் வரியும் ஆங்கும்.
இந்தச் சலுகையில் டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது.

எவ்வளவு டிக்கெட்கள் சலுகையில் கிடைக்கும்?

இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் குறைந்த அளவில் குறிப்பிட்ட விமானங்களில் மட்டுமே கிடைக்கும். ஒரு முறை பயணம் செய்ய மட்டுமே சலுகை அளிக்கப்படும்.

Have a great day!
Read more...

English Summary

AirAsia India Offers 40% Discount On Domestic Flight Tickets