ரூ.317 ரீபண்டு பெற முயன்று 16,000 ரூபாய் இழந்த பெங்களூரு பெண்..!

பெங்களூருவில் 40 வயதான பெண் ப்ருவர் ஆனலைனில் தவறாகத் தான் பெரிவர்த்தனை செய்ய 317 ரூபாயினைத் திரும்பப் பெற முயன்று 16,000 ரூபாயினை இழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இவரது புகாருக்கான அலுவலக அழைப்பு போன்று செய்து கணக்கின் விவரங்களைப் பெற்று சில நொடிகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.

மின்சாரக் கட்டணம்

2018 ஜூன் 20-ம் தேதி PayUmoney செயலியில் தனது வீட்டின் மின்சாரக் கட்டணட்தினை செலுத்த முயன்ற பெங்களூருவை சேர்ந்த விதித்தா சவுதிரி தவறான தொகையினை உள்ளிட்டதால் அதனை உடனே திரும்பப் பெற முயன்றுள்ளார்.

பெங்களூரு மின்சார வாரியமான பெஸ்காமில் தவறான பரிவர்த்தனை குறித்து உடனே புகாரினை விதித்தா சவுதிரி தெரிவித்துள்ளார்.

 

மோசடி அழைப்பும் மின்னஞ்சலும்

ஆனால் 4 நாட்களுக்குப் பிறகு 24-ம் தேதி இவருக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.

காலை 11:23 மணியளவில் உங்களுக்கு விரைவில் போன் அழைப்பு வரும் என்று consumercomplaintsboardfast@gmail.com என்ற மின்னஞ்சல் அனுப்பப்பட்ட சில நிமிடங்களை அழைப்பும் வந்துள்ளது.

 

புகார்

யாரென்று தெரியாத ஒருவரின் மொபைல் எண்ணில் இருந்து இரண்டு முறை தன்னை அழைத்ததாகவும் மைக்ரோ லேஅவுட் காவல் நிலையத்தில் இவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னைத் தொடர்புகொண்டவர் பெஸ்காம் ஊழியர் என்று தெரிவித்ததாகவும் தன்னிடம் இருந்து வங்கி விவரங்களைப் பெற்று 16,000 ரூபாய் பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

PayUmoney

விதித்தா அதே நேரம் PayUmoney தளத்திலும் தனது புகாரினை அளித்துள்ளார். அதற்கு அவருடைய பணம் செலுத்துனரின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மோசடி அழைப்புகள் வந்த மொபைல் எண்ணை மட்டும் அவர்கள் பெற்றுத் தற்போது விசாரித்தும் வருகின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

Bengaluru Woman lost Rs. 16,000 while trying to save Rs. 317