பாபா ராம்தேவ் தான் இந்தியாவின் அடுத்தப் பிரதமர்.. நியூ யார்க் டைம்ஸின் குசும்பு..!

அமெரிக்காவின் புகழ் பெற்ற நியூ யார்க் டைம்ஸ் அன்மையில் பாபா ராம்தேவினை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ஒப்பிட்டுப் பேசியது மட்டும் இல்லாமல் இந்தியாவின் அடுத்து பிரதமர் யார் என்றும் கணித்து இருந்தது.

மேலும் அதில் பாபா ராம்தேவால் இந்திய அரசியலில் மிகப் பெரிய இடத்திற்குச் செல்ல முடியும் என்றும் மோடி வெற்றி பெற இவர் எந்த அளவிற்கு உதவினார் என்று எல்லாம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மோடிக்கு உதவி

பாபா ராம்தேவ் இந்துக்கள் உரிமைக்காகத் தனது குரலினை எழுப்புவது மற்றும் 2014ம் ஆண்டுத் தேர்தலின் போது இவரது பிரச்சாரங்கள் மோடிக்கு உதவியது, மோடி வெற்ற பிறகு மிகப் பெரிய அரசில் மாற்றத்திற்குத் தயார் ஆக வேண்டும் என்று எல்லாம் பேசியிருந்தார் என்றும் நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்பிற்கு இந்தியாவின் பதிலாகப் பாபா ராம்தேவ் உள்ளார், பிரதமராகக்கூடிய வாய்ப்பு உள்ளது. டிரம்ப் போன்று கோடிகளில் வாழ்ந்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் டிரம்ப் போன்று டிவிகளிலும், ஒரு பிராண்டு என்றில்லாமல் நாடு முழுவதிலும் பிரபலமான ஒருவராகவும் பாபா ராம்தேவ் உள்ளார்.

வணிகர்

மிகப் பெரிய பின் தொடர்பாளர்கள் என்றில்லாமல் ராம்தேவ் மிகப் பெரிய வணிகராக உருவெடுத்துள்ளார்.10 வருடத்திற்கு முன்பு ஒரு சிறிய கடையாக இருந்த பதஞ்சலி இன்று 1.6 பில்லியன் டாலர் விற்பனை செய்யும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பாபா ராம்தேவ் இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளதும் முக்கியக் காரணம் ஆகும்.

பாபா ராம்தேவ்

மேலும் நியூ யார்க் டைம்ஸ் பிரதமர்களை விட மிக அதிகாரம் படைத்தாராக ராம்தேவ் வளர்ந்துள்ளார். அவர் ஒரு முற்றிலும் புதிய இனமாக இருக்கலாம்: ஒரு பிரபலமான தலைவர், பரந்த நோக்கத்தோடு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, பரிசுத்த நோக்கத்திற்கான ஒருவராக ராம்தேவ் உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

New York Times Compares Ramdev With Donald Trump, Says he Could be India's PM