5 மாதத்தில் 60,000 கோடி.. விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்.. யோகியை புகழும் மோடி!

உத்தரப்பிரதேசத்தில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டங்களைத் தொடங்கிய வைத்த பிரதமர் நரேந்திர மோடி, டிரில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி எட்டும் என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் லக்னோவில் நடைபெற்ற விழாவில் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 81 திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி இவ்வாறு பேசினார்.

டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

உத்ரப்பிரதேசத்தில் முதலீடு செய்வது அறைகூவலாக இருக்கும் என்று கருதினார்கள். விரைவான வளர்ச்சிக்கான திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை உத்தரப்பிரதேசம் ஈட்டுவதற்கு அதிகக் காலம் பிடிக்கும் என்று நான் கருதவில்லை.

இது ஒரு சாதனை

5 மாத காலத்துக்குள் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்குவது எந்த மாநிலத்திலும் நடந்திராத சாதனை. தொழில்துறையை விரும்பும் ஒரு முதலமைச்சரை நான் பெற்றுள்ளேன். அதனால் தான் குறுகிய காலத்தில் பிரமாண்டமான இந்தச் சாதனையைச் செய்யச் சாத்தியமாக்கியிருக்கிறது.

செல்போன் உற்பத்தி ஆலைகள்

இந்தியாவின் மொபைல் உற்பத்தி மையமாக உருவாகியுள்ள இந்தியா, உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டில் உற்பத்தி புரட்சியை உருவாக்கியுள்ள உத்தரப்பிரதேசத்தில், 50 செல்போன் தயாரிப்பு ஆலைகள் இருக்கின்றன.

கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு

வேளாண்துறை வளர்ச்சி பெற பன்னாட்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நிதியை தாராளமாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விவசாயத்தில் தொழில்நுட்பத்தைக் கொண்டுவர வேண்டும். அவர்களின் வருவாய் உயர கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.

Have a great day!
Read more...

English Summary

PM Narendra Modi says Yogi’s UP to soon become $1 trillion economy