மீண்டும் ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்பதற்கான முக்கியக் காரணங்கள்..!

கடந்த சில மாதங்களாக நாணய கொள்கை கூட்டத்திற்கு மிகப் பெரிய சிக்கல்கள் எழுந்து வருகிறது. சில ஆண்டுகளாகக் கச்சா எண்ணெய் விலை சரிவும் பொருட் சந்தையில் விலை சரிவு, குறைந்த அடிப்படை ஆதார விலை போன்ற காரணங்களால் பணவீக்கம் குறைந்து இருந்தது தற்போது தலைக்கிழாக மாறியுள்ளது.

எனவே ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கண்டிப்பாக வட்டி விகிதத்தினை உயர்த்த வேண்டும் என்று கூறப்படும் 5 முக்கியக் காரணங்கள் என்ன என்று இங்குப் பார்க்கலாம்.

குறைந்த ஆதரவு, அதிகப் பண வீக்கம்

விவசாயிகளின் வருவாயினை உயர்த்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு விவசாயப் பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையினை உயர்த்தியுள்ளதால் அத்தியாவசிய தேவை பொருட்கள் விலை உயர்வது மட்டும் இல்லாமல் பண வீக்கமும் அதிகரிக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பானது பணவீக்கத்தினைப் பெறும் அளவில் பாதிக்க உள்ளது.

கச்சா எண்ணெய் விலை

ஜூன் மாத நாணய கொள்கை கூட்டத்தின் போது கச்சா எண்ணெய் நிலையானதாக இருந்தது. ஆனால் விலை உயர்ந்தால் மத்திய வங்கிக்கு அதனால் கண்டிப்பாகப் பிரச்சனை எழும். அதே நேரம் கச்சா எண்ணெய் எப்போது நிலையானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. சர்வதேச சந்தையின் நிலையினைப் பார்க்கும் போது கச்சா எண்ணெய் மீண்டும் விலை உயரும் என்பது உறுதி.

விலகியே இருத்தல்

தேவை அதிகம் இருக்கும் போது வணிகம் என்பது விலையினை உயர்த்தும் அதே நேரம் பொருளாதாரம் விலை உயர்வைச் சமாளிக்கும் அளவிற்கு நிலையானதாக உள்ளது.

தேர்தல்

2019-ம் ஆண்டு மக்களவைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்த ஒரு அரசாக இருந்தாலும் பிரபலமான நடவடிக்கைகள் எடுப்பதை மறுக்கவே முடியாது. மத்திய அரசு இது போன்ற முடிவுகளைத் தாற்காலிகமாக எடுத்தாலும் மாநில அரசுகளை அதனைத் தவிர்த்துவிடுகின்றன, குறிப்பாகப் பருவமழை அதிகம் பெய்யும் போது. ஏற்கனவே 10 மாநிலங்கள் விவசாயக் கடனை இரத்து செய்துள்ள நிலையில் அதுவும் ஆர்பிஐக்குச் சிக்கலினை ஏற்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.

மையப் பணவீக்கம்

மத்திய வங்கி தேவை எங்கு அதிகம் இருக்கிறதோ அதற்க்கேற்றவாறு தனது கொள்கையினை மாற்றி அமைக்கும். மைய பணவீக்கமானது உணவு மற்றும் கச்சா எண்ணெய்யினைத் தவிர்த்தது ஆகும். அது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்தினைத் தாண்டி 5 சதவீதமாக அச்சத்தினை ஏற்படுத்தி வருகிறது. உற்பத்தியாளர்கள் விலைகளை உயர்த்தி இருப்பதே இந்த மைய பணவீக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் ஆகும்.

Have a great day!
Read more...

English Summary

Reasons why it has become imperative for RBI to hike rates