அம்பானியின் அடுத்த டார்கெட்.. கண்ணீர் விட இருக்கும் அமேசான், பிளிப்கார்ட்..!

ஆன்லைன் சில்லறை வர்த்தகம் மூலம் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இந்த ஆண்டில் 32.70 டாலர்களை வருவாயாக ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெசான், பிளிப் கார்ட் நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.

வளர்ச்சிக்கான வாய்ப்பு - நம்பிக்கை

ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து வணிக ரீதியிலான மையங்களை இந்தியா முழுவதும் தொடங்கியது. அதிரடியான இந்த மாற்றங்களால் ரிலையன்ஸ் ஒரு தொழில் நுட்பத் தளமாக மாற்றம் பெறுகிறது. ஆன் லைன் மற்றும் ஆப்லைன் மூலமான கலப்பு வர்த்தகத்தில், வளர்ச்சிக்கான வாய்ப்பு இருப்பதாக அம்பானி நம்புகிறார்.

ரிலையன்ஸ் விற்பனை

ஸ்மார்ட் போன்களில் 38 சதவீதம், தொலைக்காட்சி பெட்டி விற்பனையில் 12 சதவீதம் தன் கணக்கைப் பதிவு ரிலையன்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. 6 முதல் 7 விழுக்காடு வரை வீட்டு உபயோகப் பொருட்களை விற்று வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பிளிப்கார்ட்- அமேசான் ஆதிக்கம்

இந்தியாவில் ஸ்மார்ட் போன் மற்றும் மின்னணுப் பொருட்கள் விற்பனையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் 50 முதல் 60 சதவீதம் வரை சந்தையை ஆக்கிரமித்துள்ளன. எதிர்காலத்தின் இந்த வர்த்தகத்தைத் தனது போட்டியால் ரிலையன்ஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

சலுகைகளை வாரி வழங்க முடிவு

சில்லறை வர்த்தகச் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க, மணி நேர இடைவெளிகளில் கூடச் சலுகைகளை அளிக்க முடிவு செய்துள்ள ரிலையன்ஸ், புதிய மற்றும் பழைய பொருட்களை இதேபோக்கில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் அங்காடிகளில் மிகப் பிரபலமான சாம்சங், எல்.ஜி, பானாசோனிக் உள்ளிட்ட தயாரிப்புகளை மிகக் குறைந்த விலையில் விற்று வருகிறது. அமேசான், பிளிப் கார்ட்டுக்கு எதிராக ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தப் பொருட்களின் விலையைக் குறைத்தே விற்பனை செய்யும் எனத் தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

விழாக்காலச் சிறப்புத் தள்ளுபடி

டெலிவிஷன், ஸ்மார்ட் போன்கள், மற்றும மின்னணு பொருட்களின் பெரும் பகுதியை, விழாக்காலச் சிறப்புத் தள்ளுபடிகளில் வழங்குவதற்கான வாய்ப்பை ரிலையன்ஸ் எதிர்நோக்கியுள்ளது. இதனால் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களைக் கவர முடிவு செய்துள்ளது.

முன்னேற்பாடுகள் தீவிரம்

ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள 4530 ஜியோ சிறு கடைகளும், 350 ரிலையன்ஸ் ரிஜிட்டல் நிறுவனங்களும், ஆன்லைன் ஆர்டர்களைப் பெற்றுள்ளன. இதில் அனைத்து ஸ்மார்ட் போன்கள், டெலிவிஷன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விவரங்கள் அட்ங்கிய கேட்டலாஹூ விநியோகித்து வருகிறது. நான்காவது காலாண்ல் 10 விழுக்காடு விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது.

சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி

நெருக்கடியான இந்தச் சில்லறை வணிகச் சந்தையில் ஒரு ஆக்கப்பூர்வமான உபாயத்தை ரிலையன்ஸ் கண்டு பிடிப்பது எளிதான காரியமல்ல. ஏனென்றால் பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மால், சியோமி இன் எம்ஐ ஆகியவை ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவான்களாக இருக்கின்றன. இந்தப் போட்டிகளால் இந்தியாவின் சில்லறை வர்த்தகம் வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி அடையும்.

Have a great day!
Read more...

English Summary

Reliance Retail Challenges Amazon, Flipkart By starts online Sales of smartphones, electronic goods