டிவி, பிரிட்ஜ், வாஷிங் மேஷின் வாங்க வேண்டுமா? சாம்சங், கோத்ரேஜ் என விலையைக் குறைக்கும் நிறுவனங்கள்!

ஜூலை 21-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல பொருட்கள் மீதான வரி விகிதத்தினைக் குறைத்துள்ள நிலையில் சாம்சங், கோத்ரேஜ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மீதான விலையினைக் குறைத்துள்ளன.

டிவி, குளிர் சாதன பெட்டி, வாஷிங் மெஷின் என 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதத்தினைக் குறைத்தது மட்டும் இல்லாமல் ஜூலை 27 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்து இருந்த நிலையில் எந்தப் பிராண்டு பொருட்கள் விலை எல்லாம் எவ்வளவு குறைந்துள்ளது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

சாம்சங்

எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிகப் பெரிய நிறுவனமான சாம்சங் கிட்டத்தட்ட 8 சதவீதம் வரை தங்களது பல உற்பத்தி பொருட்கள் மீதான விலையினைக் குறைத்துள்ளது. சாம்சங் நிறுவனம் டிவி, வாஷிங் மெஷின் மற்றும் குளிர் சாதன பெட்டி போன்ற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோத்ரேஜ்

கோத்ரேஜ் நிறுவனம் வாஷிங் மெஷின், குளிர் சாதன பெட்டி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் செஸ்ட் ப்ரீசர்ஸ் போன்றவற்றின் மீதான விலையினை 7 முதல் 8 சதவீதம் வரை குறைத்துள்ளது.

எல்ஜி & பானாசோனிக்

எகல்ட்ரானிஸ் துறை ஜாம்பவானான எல்ஜி 8 முதல் 9 சதவீதம் வரை தனது தயாரிப்புகளின் விலையினைக் குறைத்துள்ளது. அதே நேரம் பானாசோனிக் தங்களது தயாரிப்புகளின் விலையினை 7 முதல் 8 சதவீதம் வரை குறைத்துள்ளது.

ஹாவெல்ஸ்

ஹாவெல்ஸ் நிறுவனம் தங்களது தயாரிப்புகளின் விலையினை 7முதல் 8 சதவீதம் வரை குறைக்க உள்ளது.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி கவுன்சில் குளிர் சாதன பெட்டி, ப்ரீசர்ஸ், ப்ரீசர் சாதனங்கள், வாட்டர் கூலர், மில்க் கூலர், ஐஸ் க்ரீம் ப்ரீசர், வாஷிங் மெஷின், 27 இஞ்ச் டெலிவிஷன், வேக்கம் கிளீனர், உணவு கிரைண்டர், மிக்சி, உணவு அல்லது ஜூஸ் எக்ஸ்ட்ராக்ட்டர், ஷேவர், ஹேர் கிளிப்பர், வாட்டர் ஹீட்டர், ஹேர் டிரையர், எலக்ட்ரிக் ஸ்மூத்திங் இரும்பு, லாண்ட்ரி மெஷின் போன்றவற்றின் விலை குறைந்துள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் ஏசி மட்டும் இன்னும் 28 சதவீத வரி விகிதத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Have a great day!
Read more...

English Summary

Samsung, Godrej, Others Reduce electronic Products Prices After GST Rate Cut