ஓரே வாரத்தில் ரூ. 80,000 கோடி சேர்த்த 7 நிறுவனங்கள்..!

மும்பை பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 79,929 கோடி ரூபாய் அதிகச் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதில் ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு அதிகளவிலான உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டிசிஸ், மாருதி சுசூகி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ், ஹெச்டிப்எசி வங்கி, ஹெச்டிப்எசி மற்றும் எஸ்பிஐ வங்கி பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்ட காரணத்தால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 35,129.72 கோடி ரூபாய் உயர்ந்து 3,69,259.15 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டாப் 10 நிறுவனங்களில் அதிக உயர்வை அடைந்த நிறுவனமாக உள்ளது.

இதேபோல் SBI வங்கியின் சந்தை மதிப்பு 22,891.57 கோடி ரூபாயும், ஹெச்டிப்எசி 11,712.2 கோடி ரூபாயும், ஹெச்டிப்எசி வங்கி 3,515.53 கோடி ரூபாயும் உயர்ந்துள்ளது.

மேலும் ரிலையன்ஸ் 665.33 கோடி ரூபாயும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 292.23 கோடி ரூபாயும் உயர்ந்துள்ளது.

Read more about: itc stock market ஐடிசி

Have a great day!
Read more...

English Summary

Seven of top 10 firms add Rs 79,929 crore to mcap