லாபத்தில் 46% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் ஆக்சிஸ் வங்கி..!

இந்தியாவில் 3வது மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி 2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் வராக் கடன் பிரச்சனைகளால் லாபத்தில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.

Advertisement

ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் வெறும் 701 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,306 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதன் மூலம் வருடாந்திர அடிப்படையில் ஆக்சிஸ் வங்கி லாபத்தில் சுமார் 46 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

மார்ச் காலாண்டில் 6.77 சதவீதமாக இருந்த வராக் கடன் ஜூன் காலாண்டில் 6.52 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஆக்சிஸ் வங்கியின் வராக் கடன் அளவு 5.03 சதவீதமாக இருந்தது.

ஜூன் காலாண்டில் இவ்வங்கியின் மொத்த வட்டி வருமானம் 11.93 சதவீதம் வரையில் உயர்ந்து 5,166.80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

English Summary

Axis Bank Q1 net profit down 46.3% to Rs 701.90 crore
Advertisement