கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பங்குதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 2:1 போனஸ் மற்றும் டிவிடெண்ட்..!

கோத்ரேஜ் கம்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டு 80 சதவீதம் நிகர லாபம் அடைந்துள்ளதாகப் பதிவு செய்து இருந்த நிலையில் அதன் பங்குகள் செவ்வாய்க்கிழமை சரிந்தே காணப்படுகிறது.

2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் நிறுவனம் சென்ற ஆண்டினை விட 80% நிகர லாபம் என 405 கோடி ரூபாயினைப் பதிவு செய்துள்ளது.

போனஸ்

ரீயூட்டஸ் 293 கோடி ரூபாய் மட்டுமே நிகர லாபம் பெற முடியும் என்று கனித்த நிலையில் கோத்ரேஜ் கம்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் 2:1 போனஸூம் அறிவித்து ஆச்சர்யத்தினை அளித்துள்ளது.

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் பங்கு தார்களிடம் உள்ள 2 பங்குக்கு ஒரு பங்கை போனஸாக அளிக்கப் போர்டு குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

டிவிடண்ட்

2018-2019 நிதி ஆண்டில் பங்கு தார்களுக்குப் போனஸ் அளிப்பது மட்டும் இல்லாமல் ஒரு பங்குக்கு 2 ரூபாய் என டிவிடண்ட்டையும் அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த டிவிடண்ட் தொகையானது 2018 ஆகஸ்ட் 21-ம் தேதி வழங்கப்படும் என்றும் பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

பங்குகள்

தற்போது கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் சந்தை மூலதனம் 68,14,44,064 ரூபாயாக உள்ள நிலையில் அதுவே இந்தப் போனஸ் மற்றும் டிவிடண்ட் அளிப்பிற்குப் பிறகு 102,21,66,096 ரூபாயாக அதிகரிக்கும்.

2019

2019-ம் ஆண்டு மேலும் பல தயாரிப்புகளைக் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் கீழ் வெளியிட உள்ள நிலையில் அது கண்டிப்பாக மிகப் பெரிய ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கோத்ரேஜ் தெரிவித்துள்ளது.

போனஸ் எப்போது கிடைக்கும்?

நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் அனுமதி அளித்த 2 மாத காலத்திற்குப் போனஸ் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

Godrej Consumer announces 1:2 bonus issue & Divident also