ஹார்லி டேவிட்சன் புதிய திட்டம்.. இந்தியா தான் டார்கெட்..!

உலகின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன், டிரம்ப் அரசுக்கு எதிராகப் புதிய உற்பத்தி தளத்தை ஐரோப்பாவில் அமைக்கத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கும் அதே வேளையில் இந்திய மக்களையும், இந்திய சந்தையையும் கவர புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.

நம்ப முடியாது

இந்நிறுவனத்தின் வளர்ச்சி இனியும் அமெரிக்கா, ஐரோப்பா சந்தையை மட்டும் நம்பியிருக்கக் கூடாது எனத் திட்டமிட்டு தனது வர்த்தக இலக்கை இந்தியாவை மையப்படுத்தி ஆசிய சந்தையை முழுவதையும் கைப்பற்ற முடிவு செய்துள்ளது.

எலக்ட்ரிக் பைக்

ஏற்கனவே ஹார்லி டேவிட்சன் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பமான எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் முழுமையாக இறங்கியுள்ளது. லைவ்வையர் பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் எலக்ட்ரிக் பைக் 2020ஆம் ஆண்டுப் பொதுச் சந்தைக்கு வருகிறது.

புதிய முடிவு

இந்நிலையில் இந்தியா, ஆசிய சந்தையைக் கைப்பற்ற எலக்ட்ரிக் பைக்கும், தற்போது இந்நிறுவனத்தில் இருக்கும் பைக்குகள் வைத்துக்கொண்டு நிச்சயம் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த ஹார்லி 500-1250சிசி பிரிவில் புதிய வாகன உற்பத்தியும், ஆசிய இந்திய சந்தைகளைக் கைப்பற்ற 250-500சிசி பைக்குகளையும் தயாரிக்க முடிவு சய்துள்ளதாக அறிவித்துள்ளது.

குறைவான விலை

குறைந்த திறன் கொண்ட பைக்குகளைக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என ஹார்லி நம்புகிறது.

புதிய மாடல்கள்

இதன் வாயிலாக இத்திட்டத்தின் முதல் படியாக Harley-Davidson Pan America, the 1250 Custom and the 975 Streetfigher ஆகிய மாடல் பைக்குகளைக் குறைந்த திறன் கொண்டு தயாரிக்க முடிவு செய்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Good news! HARLEY DAVIDSON took major decision for india