ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை.. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்த இந்தியா..!

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை காரணமாக ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசலை 12 சதவீதமாக இந்தியா குறைத்துள்ளது. ஆனால் விற்பனை 50 விழுக்காட்டை விட அதிகரித்துள்ளது.

பொருளாதாரத் தடை - தயக்கம்

ஈரானின் எரிபொருள் இறக்குமதி வாடிக்கையாளர்களில் சீனாவுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியா, ஈரானை தனிப்பட்டுத்த தொடங்கிய அமெரிக்காவால் வர்த்தகத்தில் கவனம் செலுத்தத் தயங்கியது. இந்நிலையில் ஆகஸ்டு 6 ஆம் தேதி ஈரான் எரிபொருட்கள் மீதான முதல் தடையை அமெரிக்கா விதிக்க இருக்கிறது.

ஈரான் இறக்குமதி

கடந்த ஜூன் மாதம் ஈரானிலிருந்து ஒரு நாளைக்கு 6 லட்சத்து 64 ஆயிரம் பீப்பாய்களை இந்தியா இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதற்கு முந்தைய காலகட்டங்களில் இதைவிடக் கூடுதலாகவே இறக்குமதியானதாகக் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் அளவு

2017 ஆம் ஆண்டு இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஈரானிலிருந்து 1.9 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 2.82 மில்லியன் கச்சா எண்ணெய் வழங்குமாறு கோரப்பட்டது

16 விழுக்காடு குறைவு

ஈரானின் இலவசக் கப்பலும், 60 நாள் கடன் அவகாசமும் இறக்குமதியை அதிகரித்தது. ஈராக்கை அடுத்து இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் ஈரான் இரண்டாவது இடத்தில் உள்ளது. பொருளாதாரத் தடை மிரட்டலால் எண்ணெய் இறக்குமதி 16 சதவீதம் சரிவு ஏற்பட்டதாகப் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

India’s Oil Imports From Iran Fall in June Over US Sanctions Fear