97 சதவீத லாபம் மாயமானது.. இண்டிகோ நிறுவனத்தின் பரிதாப நிலை..!

நாட்டின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ ஜூன் காலாண்டில் வெறும் 27.8 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டில் 811.1 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்குசந்தை

இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின்பு 3 வருடத்தில் மிகவும் குறைந்த லாபத்தைப் பற்றுள்ளது இந்தக் காலாண்டு ன்பது குறிப்பிடத்தக்கது.

52 வார சரிவு

இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் இண்டிகோ நிறுவனம் 0.2 சதவீதம் வரையில் சரிந்து 52 வார சரிவான 993 ரூபாய் அளவை அடைந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.

காரணம்

இந்திய ரூபாய் மதிப்பு அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் பரிமாற்றத்தின் வாயிலாகவும், அதிக எரிபொருள் சலவுகள், போட்டி மிகுந்த சந்தை ஆகியவற்றின் காரணமாக இண்டிகோ தற்போது லாபத்தில் அதிகளவிலான சரிவை அடைந்துள்ளது என இண்டிகோ தெரிவித்துள்ளது.

வருவாய்

2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் இண்டிகோ நிறுவனம் மொத்த வருமானமாகச் சுமார் 6,818.3 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 14.5 சதவீதம் அதிகம் என்றாலும் லாபம் 97 சதவீதம் சரிந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

IndiGo Q1 net profit crashes 97 percent