டிசிஎஸ்-ஐ பின்னுக்கு தள்ளி முதல் இடத்தினை பிடித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் செவ்வாய்க்கிழமை 12:36 மணியளவில் 2.161 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 1174.90 ரூபாய் என்று 7.44 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனத்தினைப் பெற்று இந்தியாவின் மதிப்பு வாய்ந்த நிறுவன பட்டியலில் டிசிஎஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தினைப் பிடித்துள்ளது.

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 1930 ரூபாய் என்று 7.39 டிரில்லியன் சந்தை மூலதனத்தினைப் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் லாபம்

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டின் ரிலையன்ஸ் நிறுவனம் நிகர லாபம் 19.9 சதவீதம் உயர்ந்து 612 கோடி ரூபாயாக உயர்ந்ததாக அறிவித்ததனை எடுத்து மிகப் பெரிய அளவில் சந்தை மூலதனத்தினைப் பெற்று வருகிறது.

டிசிஎஸ் வருவாய்

அதே நேரம் டிசிஎஸ் நிறுவனம் முதல் காலாண்டு அறிக்கையில் 5 பில்லியன் டாலரினை வருவாயாகப் பெற்றுள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எப்படி?

எண்ணெய் சுத்திகரிப்பு வணிகத்திற்குக் கிடைத்த ஊக்குவிப்பு மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் வருவாய் அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸின் பங்குகள் மிக அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோவின் வட்டி மற்றும் வரிக்கு முந்திய வருவாயானது உயர்ந்து 1,708 கோடி ரூபாயாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் வருவாய் பிரைம் உறுப்பினர் சலுகை போன்ற காரணங்களால் 2 சதவீதம் சரிந்து இருப்பினும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 14 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் பிரிவில் அதிகளவிலான வருவாய் மற்றும் வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் நுகர்வோர் சந்தையிலும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதால் கடந்த நிதியாண்டை விடவும் 56.5 சதவீத அதிக வருவாயை அடைந்துள்ளது.

இதன் மூலம் ஜூன் காலாண்டில் ஒரு பங்கிற்கான வருமானம் கடந்த நிதியாண்டின் 13.5 ரூபாய் என்ற நிலையை விட 16 ரூபாய் என்ற அதிக வருமானத்தை அளித்துள்ளது.

 

ரீடெயில்

ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் மூலம் சுமார் 25,890 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ள இது கடந்த நிதியாண்டை விடவும் 124 சதவீதம் அதிகமாகும். இதேபோல் டிஜிட்டல் சர்வீஸ் வர்த்தகத்தின் மூலம் 9,653 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Reliance Industries Tuesday toppled TCS as the most valued company in India