இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்த அமேசான்..!

கூர்கான் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சூப்பர் ஹைய்வே லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஷட்டல் என்னும் உள்ளூர் பயணத்திற்காகப் பஸ் புக்கிங் சேவை வழங்கி வருகிறது.

அமேசான்

இந்நிறுவனத்தின் சிறப்பான வர்த்தக முறை, வளர்ச்சி ஆகியவற்றைப் பார்த்துத் தற்போது அமேசான் இந்தியா, அமேசான் அலக்ஸா பண்ட், டென்ட்சு வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் சுமார் 11 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

முதலீட்டாளர்கள்

ஏற்கனவே இந்நிறுவனத்தில் சிகோயா கேப்பிடஸ், டைம்ஸ் இண்டர்நெட் மற்றும் லைட்ஸ்பீடு வென்சர்ஸ் ஆகியவை முதலீடு செய்துள்ள நிலையில் புதிதாக இந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.

விரிவாக்கம்

இப்புதிய முதலீட்டு உடன் ஷட்டல் சேவை டெல்லி என்சிஆர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது சூப்பர் ஹைய்வே லேப்ஸ் நிறுவனம்.

5 நகரங்கள்

தற்போது நாட்டின் 5 நகரங்களில் மட்டும் இயங்கி வரும் ஷட்டல் நிறுவனம் தினமும் 45,000 பயணங்கள், 60,000 பயணிகள் ஒவ்வொரு மாதமும் பெற்று வருகின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

Shuttl raises $11 million funding from Amazon