ஜூன் காலாண்டில் 1,902 கோடி ரூபாய் நட்டம் அடைந்த டாடா மோட்டார்ஸ்..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மூலப் பொருட்கள் விலை உயர்வால் நட்டம் அடைந்ததாக அறிவித்துள்ளது.

சென்ற நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 3,182 கோடி ரூபாய் லாபம் அடைந்த டாடா மொட்டார்ஸ் 2018-2019 நிதி ஆண்டில் 1,902-ம் கோடி ரூபாயாக லாப சரிவை பெற்றுள்ளது.

வருவாய்

டாடா மோட்டார்ஸின் 2018-2018 நிதி ஆண்டின் முதல் காலாண்டு வருவாய் 67,081 கோடி ரூபாய் ஆகும். ஜாகுவார் வருவாய் 5,222 கோடி ரூபாய் ஆகும். டாடா மோட்டார்ஸின் நிகர வருவாய் வருவாய் 16,803 கோடி ரூபாயாகும். ஜேஎல்ஆர் வருவாய் 7 சதவீதம் சரிந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் வருவாய் 83 சதவீதம் உயர்ந்துள்ளது.

விற்பனை உயர்வு

டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை 59 சதவீதம் உயர்ந்து 1,76,868 வாகனங்களை விற்றுள்ளது. அதே நேரம் ஜிஎல்ஆர் விற்பனை 7.7 சதவீதம் சரிந்துள்ளது.

செலவு

லாபம் சரிந்த அதே நேரம் டாடா மோட்டார்ஸின் செலவுகள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 17 சதவீதம் உயர்ந்து 69,890 கோடி ரூபாய் செய்துள்ளது.

பங்கு சந்தை நிலவரம்

டாடா மோட்டார்ஸ் பங்குகள் செவ்வாய்க்கிழமை 3.15 புள்ளிகள் என 1.18 சதவீதம் சரிந்து 264.15 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. நாளை மேலும் பங்குகள் சரிய வாய்ப்புகள் உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Tata Motors Reports Loss Of Rs. 1,902 Crore In 2018 June Quarter