விஜய் மல்லையாவை நாடுகடத்தும் வழக்கு.. செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

9,000 கோடி ரூபாய் வங்கி மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரிய வழக்கு மீதான விசாரணை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

மல்லையா வழக்கு ஒத்திவைப்பு

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கடன் பெற்ற மல்லையா, திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றனர். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று இருதரப்புக்கும் இடையே வாத பிரதிவாதங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி ஆர்தர்நாட் அறிவித்தார். இருதரப்பும் சமர்ப்பித்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தபிறகு இறுதி விசாரணை நடைபெறும் என்றார்.

கடனை திருப்பிச் செலுத்த முடிவு

ஆர்தர் ரோடு சிறைச்சாலை தொடர்பான வீடியோ காட்சிகள் ஒப்படைப்பது தொடர்பான கேள்விகளை நீதிபதி எழுப்பினர். முன்னதாக நீதிமன்ற வாயிலில் பேசிய மல்லையா, தனது சொத்துக்களை விற்று 14 கோடி ரூபாயைச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறினார். இது தொடர்பான நீதிமன்றம் பிறப்பித்த ஆணை நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

வங்கி மோசடி

17 வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற மதுபான அதிபர் விஜய் மல்லையா, 2016 ஆயிரம் ஆண்டுத் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாகச் சம்பந்தப்பட வங்கிகள் வழக்குத் தொடர்ந்தன. வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

Have a great day!
Read more...

English Summary

Vijay Mallya extradition case: Hearing in UK court adjourned till September 12