இந்தியாவுக்குத் திருப்பி விடப்படுமா மல்லையா விமானம்.. தலைவிதியை எழுதுகிறது லண்டன் நீதிமன்றம்!

மதுபான அதிபர் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரிட்டன் நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் முக்கியத் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமெடுத்த வழக்கு

வங்கிகளில் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்பிச் சென்ற விஜய் மல்லையா லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஐ.டி.பி.ஐ தொடர்ந்த இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் வேகமெடுத்தது.

விசாரணை- வாதப்பிரதிவாதம்

வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்மா அர்புத்கோட் எழுத்துப்பூர்வமான வாத்தை தாக்கல் செய்யுமாறு தெரிவித்திருந்தார். ஆனால் பொதுநலம் சார்ந்த வழக்கு என்பதால் வாதங்களை முன் வைக்க வேண்டும் என மல்லையா வழக்குரைஞர் கூறியிருந்தார். மோசடி வழக்கு என்பதை விட வர்த்தகத் தோல்வியாகக் கருத வேண்டும் என்று கூறிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மல்லையா மீது வழக்குத் தொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மல்லையாவுக்கு எதிரான ஆதாரங்கள்

விசாரணையில் இந்திய அரசு தாக்கல் செய்த மல்லையாவுக்கு எதிரான ஆதாரங்கள், வழக்குத் தொடர்ந்த வங்கிகளுக்குச் சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மல்லையாவின் மின்னஞ்சல் சம்பாஷசணைகள் மற்றும் சதித்திட்டம் தொடர்பான சாட்சியங்களை முன் வைக்கப்பட்டது.

உடைந்த மவுனம்

இதனிடையே குற்றச்சாட்டுகள் தொடர்பாக மவுனம் காத்து வந்த மல்லையா, அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது குற்றம் சுமத்துவதாகச் சாடினார். கர்நாடக உயர்நீதிமன்றம் மூலமாக 13900 கோடி ரூபாய் சொத்துக்களை விற்றுக் கடனை கட்டுமாறு தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அருண் ஜேட்லி கடிதம் எழுதிய மல்லையா, தன்னைப் போஸ்டர் பாஸ் என்று வர்ணித்தது குறித்துக் கவலை தெரிவித்திருந்தார்.

லண்டன் சொத்துக்கள் பறிமுதலா

இதனிடையே சொத்துக்களைப் பறிமுதல் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில், பிரிட்டன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஹெர்ட்போர்ட்ஷயரில மல்லையா தங்கியிருக்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறி அவகாசம் அளித்திருந்தது.

Have a great day!
Read more...

English Summary

Vijay Mallya May Come India Soon, crucial hearing in UK court today