மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு சவால் விட்ட ஹைதராபாத் ஆசாமி.. ரூ.3,178 கோடி மோசடி!

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலில் இருந்தபோது வங்கியிலிருந்து 3,178 கோடி ரூபாயை எடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம் மர்மமான ஒரு போலி முகவரியின் பேரில் மோசடியில் செய்திருப்பது அதிகாரிகளை வாய்பிளக்க வைத்துள்ளது.

மர்மமான முகவரி

ட்டிரீம் லைன் மேன்பவர் சொல்யூசன் என்ற அந்த நிறுவனம், கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தில் கதவு எண்.8-4-548, கோகுல் திரையரங்கம் அருகில்,எர்ரகடா என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முகவரியில் உள்ள வீட்டுக்கு சொந்தக்காரரான சித்தப்பா நிலையத்திடம் விசாரித்தபோது எந்தக் கம்பெனியும் இங்குச் செயல்படவில்லை என்று தெரிவித்தார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குச் சவால்

2017 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தீவிர மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது. டிரீம் லைன் மேன்பவர் நிறுவனம் உட்பட 18 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலில் இருந்தபோது ஒவ்வொரு நிறுவனமும் தலா நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்துள்ளது. இதனுடைய மொத்த மதிப்பு 9945 கோடி ஆகும். இதில் 3 நிறுவனங்கள் 3178 கோடி ரூபாயைத் திரும்ப எடுத்துள்ளது.

 

வங்கிகளில் கடன்

வரி ஆலோசனை, சட்ட ஆலோசனை, சந்தை ஆராய்ச்சி, தணிக்கை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி வந்துள்ளன. இதனை வைத்து 2012 முதல் 2017 வரை ஆயிரத்து 700 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றிருப்பது மகா மோசடிகளில் ஒன்று. அதிலும் எஸ் பேங்கில் தான் அதிகக் கடனை வாங்கியிருக்கிறது.

இரண்டு மாநிலங்களில் பதிவு

பதிவு செய்யப்பட்ட முகவரியில் செயல்படாத நிறுவனங்கள், வருமான வரிச் செலுத்தியுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் பதிவு செய்யப்பட்ட இடத்திலேயே பரிமாற்றங்களைச் செய்து வரும் இந்த நிறுவனங்கள், மும்பையில் இயங்கி வருவதாக அதன் இயக்குநர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெயர் மாறிய நிறுவனம்

எர்டகடா முகவரியில் பதிவு செய்யப்பட்ட டிரீம் லைன் சொல்யூசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தற்போது நித்யாங்க் இன்பிரா பவர் மற்றும் மல்டி வென்ச்சர் பிரேவேட் லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள், அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இன்று மர்மமாகவே பரிவர்த்தனை மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Hyderabad Company With Ghost Address Deposited Rs 3,178 Crore On Demonetisation