ஆர்பிஐ மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தியது.. கடன் மீதான வட்டி உயரும்!

இந்திய ரிசர்வ் வங்கி 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதத்தினை ஜூன் மாதம் உயர்த்திய நிலையில் மீண்டும் ஜூலை மாதம் 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக அறிவித்துள்ளது.

2013 அக்டோபர் மாத்திற்குப் பிறகு தற்போது தான் ஆர்பிஐ தொடர்ந்து இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்மை

நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ எடுத்துள்ள இந்த முடிவால் வங்கி டெபாசிட் திட்டங்களின் மீதான வட்டி விகிதம் எல்லாம் உயரும். ஏற்கனவே எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதங்களை எல்லாம் உயர்த்தியுள்ளது.

கடன்

வீட்டு கடன், வாகன கடன் தவணை மீதான வட்டி விகிதங்கள் எல்லாம் விரைவில் உயரும் வாய்ப்புகள் உள்ளது.

வீட்டு கடன் எவ்வளவு உயரும்

60 லட்சம் ரூபாய் வரை வீட்டு கடன் வாங்கியுள்ளவர்களுக்கு எவ்வளவு செலவு அதிகரிக்கும்?


நடப்பு வட்டி விகிதம்புதிய வட்டி விகிதம்நடப்பு தவணைபுதிய தவணைகூடுதல் செலவுநடப்பு வட்டி தொகைபுதிய வட்டிகூடுதல் செலவு
8.50% 8.75% 52069 53022 953 64,96,654 67,25,434 2,28,780
8.50% 9.00% 52069 53983 1914 64,96,654 69,56,053 4,59,399

Have a great day!
Read more...

English Summary

RBI Hikes Interest Rates Again; Loans To Get Costlier