கேலக்ஸி எஸ்9 தோல்வி.. சாம்சங் நிறுவனத்தின் வருவாய் 4% சரிவு..!

உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான சாம்சங், சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் சந்தையில் பெரிய அளவிலான வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வி அடைந்தது.

இதன் எதிரொலியாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வருவாய் சரிந்துள்ளது.

ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் சாம்சங் 52.24 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் மட்டுமே பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 4 சதவீதம் சரிவாகும். இக்காலாண்டில் சாம்சங் 13.3 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் வரிசை போன்களை 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது, கேலக்ஸி எஸ்9 தோல்வியின் காரணமாகச் சாம்சங் வருவாயில் சரிவை சந்தித்துள்ளது.

மேலும் சாம்சங் நிறுவனத்தின் OLED பேன்ஸ் தேவைச் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள காரணத்தால் சாம்சங் நிறுவனத்தின் வருவாயில் பெரிய அளவிலான சரிவில் இருந்து தப்பித்தது.

Have a great day!
Read more...

English Summary

Samsung quarterly revenue dips 4% amid slow smartphone sales