முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாடா மோட்டார்ஸ்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பிரிட்டன் கிளை நிறுவனமான ஜாகுவார் லேண்டுரோவர் மூலம் 1500 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டாடா மோட்டார்ஸ் 1,863.57 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.

இந்தச் செய்தியால் முதலீட்டாளர்கள் பெரிய அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் சுமார் 3,199.93 கோடி ரூபாய் லாபத்தை அடைந்த டாடா மோட்டார்ஸ், நடப்பு நிதியாண்டில் 1,863.57 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது என்பது முதலீட்டாளர்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

இக்காலகட்டத்தில் டாடா மோட்டார்ஸ் 65,956.78 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது, கடந்த ஆண்டில் இது 58,766.07 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த மிகப்பெரிய சரிவிற்கு முக்கியக் காரணம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனம் ஜூன் காலாண்டில் 210 மில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை அடைந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Tata Motors reports Rs 1,864 crore surprise loss in Q1