லாபத்தில் 12 சதவீத உயர்வில் டெக் மஹிந்திரா.. பங்குச்சந்தையில் அசத்தல்..!

இந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் 898 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டை விடவும் 12.4 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

இக்காலாண்டில் டெக் மஹிந்திரா 907 கோடி ரூபாய் லாபத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், கணிப்பை அடையாமல் நிற்கிறது டெக் மஹிந்திரா.

Advertisement

மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் லாபம் 26.5 சதவீதம் குறைந்துள்ளது.

இதேகாலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 12.8 சதவீதம் அதிகரித்து 8,276 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. இது மார்ச் காலாண்டை விடவும் 2.8 சதவீதம் அதிகமாகும்.

இந்நிலையில் 2019ஆம் நிதியாண்டின் வளர்ச்சி பாதையில் டெக் மஹிந்திரா வலிமையாக உள்ளது. மேலும் நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சிபி குருஞானி தெரிவித்துள்ளார்.

English Summary

Tech Mahindra Q1 profit rises 12% YoY to Rs 898 crore
Advertisement