லாபத்தில் 30 சதவீத உயர்வு.. செம குஷியில் ஆப்பிள்..!

உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 17 சதவீதம் உயர்ந்து 53.3 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 41.3 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது.

இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 4.43 சதவீதம் வரையில் உயர்ந்து இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலரை நோக்கிச் செல்கிறது. புதன் கிழமை வர்த்தகத்தில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 198.88 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

ஆனால் அமெரிக்க அரசு தற்போது சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்நிறுவனத்தின் வருவாய் அடுத்து வரும் காலாண்டுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் 1 டிரில்லியன் டாலர் கனவு அடைய இன்னும் சில காலம் ஆகும் எனத் தெரிகிறது.

Have a great day!
Read more...

English Summary

Apple posts strongest third quarter, nears $1 trillion value