ரூ.15,500 கோடி ஈர்க்கும் திட்டத்தில் ஹெச்டிஎப்சி வங்கி..!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி QIP மற்றும் அமெரிக்கச் சந்தையில் பத்திர வெளியிட்டு மூலம் சுமார் 15,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் பணியைத் துவங்கியுள்ளது. இந்த QIP விலையை 2,179.1 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 1.41 சதவீதம் வரையில் குறைந்து 2,172.25 ரூபாயாகச் சரிந்துள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி டிசம்பர் மாதம் தனது முதலீட்டு ஈர்ப்புத் திட்டத்தை அறிவித்திருந்தது. டிசம்பர் இவ்வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி சுமார் 24,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஈர்க்கத் திட்டமிட்டு இருந்த நிலையில் 8,500 கோடி ரூபாயை அதன் தாய் நிறுவனமான ஹெச்டிஎப்சி லிமிடெட் அளித்துள்ளது.

மீதமுள்ள முதலீட்டைத் தான் தற்போது QIP வாயிலாக ஹெச்டிஎப்சி வங்கி ஈர்க்கத் திட்டமிட்டு வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

HDFC Bank Launches Share Sale To Raise Up To Rs 15,500 Crore